

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பந்துவீச்சாளர் ஷானவாஸ் தஹானி, தோனியைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டி 20 உலகக் கோப்பை போட்டியில் பிரதான சூப்பர்-12 ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது. இப்போட்டி நாளை நடைபெறுகிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷானவாஸ் தஹானி, எம்.எஸ்.தோனியைப் பார்த்தவுடன் அவரை உற்சாகமாக அழைத்து, 'உங்கள் உடல் வலிமையாக உள்ளது' என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து கேப்டன் தோனி, 'இல்லை எனக்கு வயதாகிவிட்டது' என்று கூறினார். 'இல்லை, நீங்கள் முன்பைவிட வலிமையாக இருக்கிறீர்கள்' என்று கூறினார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணி இடம் பெற்றுள்ள சூப்பர்-12 பி பிரிவில் இந்திய அணியோடு பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், தகுதிச்சுற்றின் மூலம் வரும் இரு அணிகளும் இடம் பெறும்.
ஐபிஎல் தவிர்த்து அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்ற தோனி, தற்போது 20- 20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்திய அணிக்கு ஆலோசகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.