

சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக தோனியின் மகள் ஸிவா பிரார்த்தனை செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. 137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 2 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி ஓவரில் சிஎஸ்கே வீரர்கள் பந்து வீசும்போது, சிஎஸ்கே கேப்டன் தோனியின் மகள் அந்த அணியின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்தார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தோல்வி குறித்து கேப்டன் தோனி கூறும்போது, “நாங்கள் 150 ரன் அடித்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் அதைச் செய்யத் தவறிவிட்டோம்” என்றார்.
டெல்லி அணியுடனான சிஎஸ்கே தோல்வி சென்னை ரசிகர்களுக்குப் பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.