

அமெரிக்காவில் 139 ஆண்டுகள் பழமையான கட்டிடம் பெயர்த்தெடுக்கப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாலையில் வீடு நகர்ந்து செல்வதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரத்தில் ராணி விக்டோரியா காலத்தில் 139 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று (பிப்.21) சாலைகளில் நகர்த்திச் சென்றனர்.
இந்த வீடு 1880களில் இத்தாலிய முறையில் கட்டப்பட்டது. 6 படுக்கையறை, 3 குளியலறைகளுடன் கட்டப்பட்டு பச்சை வண்ணம் பூசப்பட்ட இந்த வீடு, உரிமையாளர்களின் தேவைக்கேற்ப சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
இதற்காக வீடு அப்படியே பெயர்த்தெடுக்கப்பட்டு மணிக்கு 1 மைல் என்ற தூரத்தில் சாலையில், ஹைட்ராலிக் இயந்திரங்களின் உதவியுடன் மெதுவாக நகர்த்திச் செல்லப்பட்டது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.