

காங்கிரஸ் மூத்த நிர்வாகி சதிஷ் சர்மாவின் உடலைச் சுமந்து சென்ற அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பெட்ரோலியல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக 1993 முதல் 1996-ம் ஆண்டு வரை இருந்தவர் கேப்டன் சதிஷ் சர்மா. 73 வயதான அவர், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவரின் உடல், இறுதி மரியாதை செலுத்தப்படுவதற்காக டெல்லி எடுத்துச் செலுத்தப்பட்டது.
அங்கு நடந்த இறுதிச் சடங்கு நிகழ்வின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவரின் உடலை சுமந்து சென்றார். இதுதொடர்பான நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டின் முன்னாள் பிரதமரும் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் சதிஷ் சர்மா என்பது நினைவு கூரத்தக்கது.