மருத்துவமனையில் படுத்திருக்கும் நபர் நிஜத்தில் யார்?- வைரலாகும் கேக் படங்கள் 

மருத்துவமனையில் படுத்திருக்கும் நபர் நிஜத்தில் யார்?- வைரலாகும் கேக் படங்கள் 
Updated on
1 min read

மருத்துவமனையில் படுத்திருக்கும் நபர் நிஜத்தில் யார் என்ற புகைப்படத்தோடு கூடிய கேள்வி இணையத்தில் அதிகம் கேட்கப்பட்டு, அதற்கான அசல் படங்கள் வைரலாகி வருகின்றன.

2020-ன் பிற்பகுதியில் 'எல்லாமே கேக்தான்' (everything is cake) என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி அது தொடர்பான புகைப்படங்களும் மீம்களும் வைரலாகின. அதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் வீட்டில் உள்ள பொருட்கள், சமையல் உபகரணங்கள், வண்டிகள் ஆகியவற்றை கேக்குகளாக வடிவமைத்துத் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிரத் தொடங்கினர்.

இந்நிலையில் இந்த ட்ரெண்ட் 2021-ம் ஆண்டிலும் தொடங்கியது. இதற்கிடையே சில நாட்களாக, மருத்துவமனையில் படுத்திருக்கும் மனிதன் நிஜத்தில் யார் என்ற கேள்வி, புகைப்படத்தோடு இணையத்தில் பரவியது. புகைப்படத்தில் ஒரு நபரின் அருகில் புகைப்படங்கள், மருந்துகள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் பதிலளித்தனர்.

இதற்கிடையே தற்போது அதன் அசலான படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மருத்துவமனையில் ஓர் ஆண் படுத்திருப்பது போன்று கேக் வடிவமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதை வெட்டி வைத்திருக்கும் படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in