நெட்டிசன் நோட்ஸ்: முத்திரை பதித்த நடராஜன்

நெட்டிசன் நோட்ஸ்: முத்திரை பதித்த நடராஜன்
Updated on
1 min read

இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாட ஆரம்பித்துள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 70 ரன்களை விட்டுக் கொடுத்தார். அறிமுகப் போட்டியிலேயே சிறப்பாகப் பந்து வீசிய நடராஜனுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Mohan தமிழன்

திறமையை ஊக்குவிக்க வேண்டும். இன்னும் பல நடராஜன்கள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில்.
வாழ்த்துகள் நடராஜன்!

புகழ்

இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், அதிகமாக மனதை அலட்டிக் கொள்வதில்லை. நடராஜன் ஆடி வெற்றி கிடைத்ததால் சிறு மகிழ்வு. அவ்வளவே..

Thala Ajith

#Nattu நடராஜன்

செம பெளலிங்!

janakiraman

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர் நடராஜன் அறிமுக ஆட்டத்திலேயே சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சகோதரருக்கு வாழ்த்துகள்.

Stalin SP

பல போராட்டங்களுக்குப் பிறகு வாழ்க்கையில ஒரு சிலர் ஜெயிச்சா நம்மளே ஜெயிச்ச மாதிரி ஒரு உணர்வு வரும்ல. அப்படி இருக்கு.

விஜய் அடைக்கன் VJ

முக்கியமான தருணங்களில் சிறப்பாகப் பந்து வீசி, தான் விளையாடிய முதல் சர்வதேசப் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தமிழக வீரர் நடராஜனுக்கு வாழ்த்துகள்.

செல்வம், அரசுப்பள்ளி ஆசிரியர்

தங்கராசு நடராஜன் பெயரைக் கேட்கும்போதே பக்கத்து வீட்டுப் பிள்ளைபோல ஒரு உணர்வு.
வாழ்த்துக்கள்யா.

arun

ஒரு நடராஜன் ஜெயித்ததற்கே இவ்வளோ சந்தோசமா இருக்கே!

D Nero

ஒரு கனவு கண்டு, அதை லட்சியமாக மாற்றி தூக்கிச்சுமந்து, காயங்கள் அவமானங்கள் ஏமாற்றங்கள் கடந்து, தான் விரும்பியதற்காக தன்னையே இழக்கத்துணிந்து.. நினைத்தவொன்றை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிற ஒவ்வொரு மனிதனும் நேசிப்பிற்கும் வசீகரத்திற்கும் உரியவனே.!!

karthick P

தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலேயே வெற்றி அணியில் முத்திரைப் பதித்த தமிழக வீரர் நடராஜன்!

Arun MaiaM

முதல் விக்கெட்டையும் எடுத்தான் முக்கியமான விக்கெட்டையும்
எடுத்தான் #நடராஜன்!

முதல் மேட்ச்லயே தெறி சம்பவம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in