Published : 04 Sep 2020 15:05 pm

Updated : 04 Sep 2020 19:48 pm

 

Published : 04 Sep 2020 03:05 PM
Last Updated : 04 Sep 2020 07:48 PM

நெட்டிசன் நோட்ஸ்: வெற்றிமாறன் பிறந்த நாள் - ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்!

vetrimaran-birthday

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், நெட்டிசன்களும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

சரவணன்.ரெங்கன்


இனிய பிறந்த நாள் மகிழ் திகழ் வாழ்த்துகள் அன்பின் வெற்றிமாறன் சார்.

மரு பிரபு மனோகரன்

"ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்”...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

எழிலரசன்

களத்தில் ஆடும் போது

அசராமல் நின்று அடிக்கும்

அசுரன் வெற்றிமாறன் அண்ணனுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


KP KALI

நம் காலத்தின் ஆகச்சிறந்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Madhavan Delta

"தவ்ளூண்டு ஆங்கர் தாண்டா, அவ்ளோ பெரிய கப்பலையே நிறுத்துது."

பிறந்த நாள் வாழ்த்துகள் வெற்றிமாறன்.

நர்சிம்

வெற்றிமாறன். நுட்பமும் மெனக்கெடலும், தான் நம்பும் கலையை அதற்கான நேர்த்தியோடு அழுத்தமான படைப்பாக மாற்றும் சம காலத்தின் இயக்குநர். நீடுழி வாழ்க பாஸ்.

புரட்சிவேங்கை மு.பா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஐபிஎல் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்ட இயக்குநர்களில் வெற்றிமாறன் முதன்மையானவர். காவல்துறையின் பைபர் லத்தியால் கடுமையாகத் தாக்கப்பட்டபோது ஓடி ஒளியாமல் நின்று களத்தில் போராடியவர்! வாழ்க பல்லாண்டு.

pragadheesh ajanthan

படி.

நல்லா படிச்சு ஒரு அதிகாரத்துல போய் உக்காரு.
ஆனா, அதிகாரத்துக்கு வந்த பிறகு அவனுங்க நமக்கு பண்றத நீ எவனுக்கும் பண்ணாத.

- வெற்றிமாறன்

நட்பின் நாயகன் தலைமை புதுக்கோட்டை

சிந்தனையும் மனசும்
ஒன்றென நினைப்பவரே!
உண்மையும் உழைப்பும்
தானென உணர்ந்தவரே!
எளியவனின் வலியையே
திரைமொழியாய் வழிமொழிபவரே!
உலக அதிர்ஷ்டமெல்லாம்
உங்களை வந்து சேரட்டும்!
வெற்றி, தோழனென
உங்கள் பெயரையே போற்றட்டும்
வாழ்த்துகள்...வாழ்த்துகள்...வாழ்த்துகள்...
வெற்றிமாறன் சார் .

Rajesh Giriprasad

"பொல்லாதவனாய்" "ஆடுகளத்தி்ல்" ஆடியதால் "விசாரணைக்கு" உட்படுத்தப்பட்ட பிறகு "வடசென்னை"யில் "அசுரனாய்" பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

Nikhil Stephen M

தமிழ்த் திரையுலகில் தரமான படைப்புகளை அளித்து வரும் இயக்குநர் வெற்றிமாறனுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

மனிதன்

நான் வெற்றிமாறன் படத்திற்கு எவ்வளவு பெரிய விசிறியோ அதே அளவு அவருடைய பேச்சுகளுக்கு விசிறி...

அசுரனில் சாதியத் தீண்டாமையின் கோரமுகம், விசாரணையில் போலி என்கவுன்ட்டர், வடசென்னை மக்களின் அரசியலைக் காட்டியவர்.

LogicalTamizhen
The more i can retain my Identity, the more i can survive. நாம வாழணும்னா நம்மோட பண்பாட்டை நாம காப்பாத்தணும். அதுக்காக மற்ற பண்பாட்டுக்கோ, மொழிக்கோ எதிராகச் செயல்படுவது நம்முடைய வேலையோ, நோக்கமோ கிடையாது!.

- வெற்றிமாறன்.


தவறவிடாதீர்!

வெற்றி மாறன்வெற்றி மாறன் பிறந்த நாள்சமூக வலைதளங்கள்Vetrimaran birthdayஆடுகளம்வடசென்னை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author