நெட்டிசன் நோட்ஸ்: தோனி பிறந்த நாள் - சாதனைக்காரன்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது 39-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Murugan Loganathan
இந்திய அணியின் கூல் கேப்டன் தோனிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
Karthikkumar
புகைவண்டியில் பயணச்சீட்டுப் பரிசோதிப்பாளராகப் பயணத்தைத் தொடங்கி
கால்பந்து வீரராகக் கால்தடம் பதித்து
இவ்வுலகில் மட்டைப் பந்து வீரராக உச்சத்தை எட்டி
எள்ளளவும் தன்னலமும் தலைக்கனமும் அற்று திகழ்ந்த எங்கள் தல தோனிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
vignesh lcg
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன், சிறந்த கீப்பிங், சிறந்த பேட்ஸ்மேன், கிரிக்கெட் வரலாற்றில் அனைத்துத் தொடர்களிலும் உலகக் கோப்பையை வென்ற நாயகன் மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாள்.
Muruganandam
பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி.
ஒவ்வொரு படியையும் சாதனைகளாக மாற்றிய சாதனைக்காரன்.
sree_prasanna
2007-ல் டி20 உலகக்கோப்பை வெற்றி. 2011-ல் இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை வெற்றி. 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வெற்றி. இப்படிப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த இந்திய இளைஞர்களின் நட்சத்திர நாயகன் மகேந்திர சிங் தோனிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ANNAATHE PONGAL
சச்சினுக்குப் பிறகு நான் ரசித்த கிரிக்கெட் வீரர். பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி.
சிவா
இறுதி வரை போராடும் குணம் கொண்டவர். எந்த ஒரு சூழ்நிலையிலும் அமைதியாகச் செயல்பட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார். உலகின் தலை சிறந்த கேப்டன் கூல். பல ரசிகர்களுக்கு INSPIRATION ஆக இருக்கும் உங்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி.
abbasofficial20
·இந்திய கிரிக்கெட் அணியின் அடையாளம். தல தோனிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
கில்லிᴹᵃˢᵗᵉʳ
இனிய 39-வது பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி.
இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கும் கிடைத்த சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், அணித்தலைவர். மீண்டும் கிடைப்பது கடினம். மூன்று விதமான உலகக்கோப்பைகளை வென்ற, அணியை வழிநடத்திய பெருமை, சாதனை வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்
எம் எஸ் தோனி
தோல்வி என்றால் அதற்கான பழியைத் தான் சுமப்பதும் வெற்றி என்றால் அணியின் வீரர்களை முன்னிறுத்துவதும் தோனியின் பாணி.
டீ
கடைசி 5 விக்கெட் 15 ரன்னுக்கு அசால்ட்டா போற தலைமுறையில் கிரிக்கெட் பார்க்க வந்தது. அப்போலாம் வயிறெரியும். என்னடா இப்படி ஆடுறாங்களேன்னு. 20 வருடங்களுக்கு அப்புறம்தான் அதுக்கான தீர்வு நமக்குக் கிடைச்சது. தோனி. நிறைய கத்துக்கிட வேண்டியிருக்கு இவர்கிட்ட இருந்து.
Backpacker
உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சகாப்தம் தோனி!
பிலிப்ஸ் ஜெ
தன்னம்பிக்கை நாயகன்
'தல' மகேந்திரசிங் தோனிக்குப்
பிறந்த நாள் வாழ்த்துகள்.
