Published : 20 Jun 2020 08:49 PM
Last Updated : 20 Jun 2020 08:49 PM

நெட்டிசன் நோட்ஸ்: பெண்குயின் - த்ரில்லிங் மிஸ்ஸிங்

அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பெண்குயின்'. இதில் கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், நித்யா கிருபா, ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் 'பெண்குயின்' வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.

அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Mirror

'பெண்குயின்' படம் பார்த்தேன்.

பரவாயில்லை.

இனி இப்படி பட்ஜெட் படங்களும், ரிலீஸ் மாடலுமே எதிர்காலம்.

திரைத்துறையினர் உணரட்டும்.

ரஜினி, கமல், விஜய்....இனி பல கோடிகள் சம்பளம் சாத்தியமில்லை.


jeevasagapthan

"I am just pregnancy not brain damaged ".
பெண்கள் தாய்மையடைவதே பெரிய பணி என்று சித்தரிக்கும் படங்களுக்கு மத்தியில், 'பெண்குயின்' திரைப்படம் நல்ல முயற்சி.


AyeshaH

படத்தோட ட்ரெய்லரைப் பார்க்கும்போது பரவாயில்லை. ஏதோ பெரிதாகச் சொல்ல வருகிறார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், படத்தைப் பார்த்தபின் ட்ரெய்லர் மட்டுமே பரவாயில்லை என்ற எண்ணமே மேலோங்கியது.

Samy gopal

இந்தப் படம் எடுக்கத் தயாரிப்பாளருக்கு #தைரியம் இருந்திருக்கும்...

இதை இயக்க இயக்குநருக்கு
#துணிச்சல் இருந்திருக்கும்...

இதை OTT யில் வெளியிட
அமேசான் பிரைம்க்கு #ஆர்வம் இருந்திருக்கும்...

#ஆனால்

இதைப் பார்க்கத்தான் நமக்கு
#பொறுமை இல்லை


Flag of India

உலகத்திலே ரொம்ப மோசமான தண்டனை என்ன தெரியுமா? நம்ம
வாழ்க்கைல நம்ம லைஃபை நம்மள மாதிரி இல்லாம
அடுத்தவங்க மாதிரி வாழச் சொல்றது ரொம்பக் கொடுமை.... #பெண்குயின்

narayanan

#பெண்குயின் த்ரில்லர்
காட்டுப் பகுதி பசுமையின் அழகு ( கீர்த்தி சுரேஷ் இரண்டு திருமணம் முதல்திருமணம் மூலம் ஒரு குழந்தை, அடுத்த திருமணம் மூலம் கர்ப்பிணி... இவரைத் துரத்தும் மர்மம்..)

பூநசி.மேதாவி

திரைக்கதை அமைப்பதில் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் . குறிப்பாக அந்த டாக்டர் - கீர்த்தி சுரேஷ் "கேம்" பொறுமையைச் சோதிப்பதோடு .. கொட்டாவி விடவைக்கிறது. மொத்தத்தில் த்ரில்லிங் மிஸ்ஸிங்.

கார்த்தி

கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதையை நன்றாக எழுதியிருந்தால் படம் சூப்பரா இருந்திருக்கும்.

Madhan kumar Jothi

'பெண்குயின்' திரைப்படத்தில் திரைக்கதையின் தொய்வு அதன் விறுவிறுப்பைக் குறைக்கின்றது.
நல்ல கதை. அதனை மேலும் மெருகேற்றி திரைக்கதை அமைத்திருக்கலாம்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பைப் பாராட்டலாம்...

pviswam
தேவையில்லாத காட்சிகள் , தேவையில்லாத திருப்பங்கள்...

COMRADE☭

நீங்க நினைச்சதெல்லாம் தப்பு, இப்படி ஒரு ட்விஸ்ட்ட நீங்க நினைச்சுப் பாக்கவே முடியாதுன்னு முடிவு பண்ணிட்டு எடுத்தா இப்படித்தான் இருக்கும். #பெண்குயின்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x