

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி .பாலசுப்ரமணியம் இன்று தனது 74-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Er Sakthivel Rengasamy
#இயற்கை எனும் இளைய கன்னியாய் #தமிழ் மண்ணில்!
பல ராகங்களில் சிகரம் எட்டிய #பாடும்_நிலா!
இனிமை மிகுந்த #குரலால் ரசிகர்களை வசியப்படுத்தி வாழும் #மன்னவன்!
எம்மை தன் #பரம ரசிகனாக்கிய #பாவலன்!
#நான்கு மொழிகளில் தேசிய விருதினை பெற்ற #நாயகன்!
சங்கவி கதிரவன்
மழை, இளையராஜா, எஸ் பி பாலசுப்ரமணியம்.
சூர்ய ரேவந்த்
எஸ்பிபி: மாயக் குரல்
நர்சிம்
இந்த "வாழ்தல் இனிது" என்பது போன்றதொரு வாழ்வை ஒவ்வொரு மேடையிலும் நிகழ்த்தும் உன்னதன். பாடுவது என்பது, just like that, மூச்சு விடுவது போன்றதொரு செயல் போல் நிகழ்த்திவிட்ட அற்புதன். நூற்றாண்டின் பாடகன். இன்னும் நூறாண்டு வாழ்க.
Raja S.
பாடல்களின் இசை அரசன்
# எஸ்பிபிக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் நலமாக வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
Daring தரணி
பாட்டு உணர்ந்து கேட்கும்போது ராகம், பல்லவி , சரணம் எதுவும் தெரியாது. ஆனா பாலு சார் தெரியும் #SPB சார் பாடல்கள் தான் முழுசா நிறைஞ்சு இருக்கும்
இன்னைக்கு என் தலைவனுக்குப் பிறந்த நாள். நீண்ட புகழோடும், அவர் மனசு போல இனிமையான காலங்களும் அமைய வேண்டும்.
தேனிக்காரன்
எத்தனையோ பாடகர்கள் வந்துவிட்ட போதும், ரஜினிக்கு ஓப்பனிங் பாட்டு SPB தான் பாடணும் என ரசிகர்கள் ஆசைப்படுவதே SPB மேஜிக்.
கண்ணம்மா
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு..!!
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்..!!
ஒரே வீணை..!!
ஒரே ராகம்..!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் SPB சார்
கரண் தேவா
பாட்டு 3:30 நிமிஷம். ஆனா 22 செகண்ட் மட்டும் தான் #SPB பாடிருப்பாரு
மொத்த தியேட்டரும் அதிருச்சு #MaranaMass
Jeeva/Kalaignani
#SPBக்கு
இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துகள்.
'முகவரி' முத்து
#பாட்டுத் #தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.