Published : 29 May 2020 19:45 pm

Updated : 29 May 2020 19:45 pm

 

Published : 29 May 2020 07:45 PM
Last Updated : 29 May 2020 07:45 PM

நெட்டிசன் நோட்ஸ்: பொன்மகள் வந்தாள் - தரம்

netizen-notes

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்மகள் வந்தாள். இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

Mohamed Faizal

ஆசிபா, ஹாசினி, நத்தினி போன்ற குழந்தைகளை உங்கள் வீட்டு குழந்தைகளின் இடத்தில் வைத்து பாருங்கள்...
அப்போதுதான் அந்த செய்தியின் வலி என்னவென்பது உங்களுக்கு புரியும்!

Durai

பெற்றோர்கள் கவனத்திற்கு.!
பெண் பிள்ளையோ ஆண் பிள்ளையும் அதீத சுதந்திரம் ஆபத்தானதே..!!!

ஆதினி


முக்கியமான ரெண்டே பாயிண்ட்.

பொண்ணுக்கு சொல்லி கொடுத்து வளக்கற மாதிரி பையன்களுக்கும் சொல்லி கொடுத்து வளக்கனும்.

ரெண்டாவது உணர்ச்சிவசப்பட்டு உடனே ஒருத்தர குற்றவாளியாக்கி அந்த எமோசனல அதிகாரம் கொீண்டவங்க யூஸ் பண்ண சாய்ன்ஸ் கொடுக்க கூடாது


Samy gopal

அமேசான் பிரைம் இல் பொன்மகள் வந்தாள் பார்த்தாகிவிட்டது
பல படங்களில் சொல்லப்பட்ட
நல்ல கருத்து தான்
ஆனால் இதே கருக்கொண்டு பல படங்கள் எடுக்கப்பட்டு விட்டது
ஒரு #ராட்சசியோ


#காற்றின்_மொழியோ


அல்ல

#பொன்மகள்_வந்தாள்


Ravanan

பசிக்கு அரிசி திருடியதற்கு அடித்து கொன்ற இதே நாட்டில் தான்...

100க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து வீடியோ எடுத்த நபர்களும் உயிருடன் வாழ்கின்றனர்...

பாதிக்கப்பட்டவங்க வெளியில வராம ஏதுமே நடக்காது

ரங்கா ரூபன்-Ranga Rooban

முதல் பாதி-பரபரப்பான சுவாரசியங்களுடன் விறுவிறுப்பாக கதை நகர்கிறது
இடைவேளை - எதிர்பாராத திருப்பம்
இரண்டாம் பாதி- பல்வேறு சுவாரசியங்களுடன்
இறுதிக் காட்சி- தரம்
மொத்தத்தில்
தவறான எண்ணங்களை தகர்த்தெறிய பொன்மகள் வந்தாள்


Pradeep

சூர்யா சார் ஜோதிகா மேம் பொன்மகள்வந்தாள் படம் நல்லா இருக்கு Jyotika mam உங்க ஆக்டிங் வேற லெவல் ரொம்ப நாள் கழிச்சு நல்ல படம் பார்த்த ஃபீலிங்


சிதறல்கள்

ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று பலர் முடிவு எடுத்து விடுகிறார்கள்
அந்த வரிசையில் தற்போது பொன்மகள் வந்தாள்


Nagendran T J

நீதிக்கு வெண்பா
குழந்தைகளுக்கு பண்பா
பெற்றொர்களுக்கு தெம்பா
தீங்குக்கு வம்பா
தவறு செய்பவர்களுக்கு கொம்பா
தட்டிக்கேட்கும் மாண்பா
இன்று அமேசான் பிரைமில்
பொன்மகள் வந்தாள்
தரிசனம் தந்தாள்
எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு
அறிவுரை வழங்க!
நன்றி!

குணா யோகச்செல்வன்

கல்யாண வீடுகளில் பல பதார்த்தங்களை சாப்பிட்ட பிறகும் சில வேளைகளில் ஒரு திருப்தி இருக்காது! அதைப் போல இருக்கிறது பொன்மகள்வந்தாள்! குற்றம் சொல்ல ஒன்றுமில்லை என்றாலும் ஏதோ ஒன்று குறைகிறது. ஜோ தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்! அவர் மீது ஏன் இவ்வளவு காழ்ப்புணர்வு என்று தெரியல!

மருதநாயகம்

இதுவும் ஒரு படம் தானே என்று கடந்து போக முடியவில்லை ...

இன்றைய காலத்தில் பெண் குழந்தையை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் ஆண் இனம் எவ்வளவு கொடுரமானதுனு..

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

நெட்டிசன் நோட்ஸ்பொன் மகள் வந்தாள்ஜோதிகாஅமேசான் பிரைம்NETIZEN NOTES

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author