

காதலுக்கு சன்டே மன்டேயே கிடையாதாம். இதுல ஊரடங்கு மட்டும் உண்டா என்ன? காற்றுக்கேது வேலி, கடலுக்கென்ன மூடின்னு காதலர்கள் வாட்ஸ் அப், மெசஞ்சர் வாயிலாகக் காதலித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களைக் குறிவைத்து சில குறும்படங்களும், குறும்புப் படங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், வந்திருக்கும் பாட்டுதான் 'குவாரண்டைன் காதலி'.
பாடலோடு அது படமாக்கப்பட்ட விதமும் ரசிக்க வைக்கிறது. வாட்ஸ் அப்பில் ஒரு பொண்ணு, இந்த குவாரண்டைன் ரொம்ப போரடிக்குது என்று தன்னுடைய ஆளுக்கு மெசேஜ் போட, பதிலுக்கு அவளுக்காகவே அவன் ஒரு பாட்டுப் போடுகிறான். அதுதான் இந்த குவாரண்டைன் காதலி பாடல்.
‘குவாரண்டைன் காதலி நீ இல்லாம தலைவலி’ என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலில்,
‘144 முடிஞ்ச பின்னே 143 சொல்லட்டுமா...
லாக்டவுன் முடிஞ்ச பின்னே லிப்லாக் பண்ணட்டுமா?
ஏ பேபி... நீதான் என் காதல் மைனா...
நீ வாடி... என்னோட குளோரோ குயினா...
வெளிய போகயில போடுறேன் மாஸ்க்கு
உன்ன பாக்காம இருக்கதுதான் பெரிய டாஸ்க்கு
டெஸ்டிங் கிட்டு வேணும் நீயும் எனக்குப் பக்கம் வேணும்
ஹெல்த்தியா நானும் வாழ பக்கத்துல நீயும் வேணும்’
என்று டைமிங் சென்சோடு, சில வரிகள் தெறிக்க விடுகின்றன. இளைஞர்களுக்காகத் துள்ளல் இசையாக வந்திருக்கிற இந்தப் பாடல், வயதைக் கடந்தவர்களையும் புன்னகைக்க வைக்கிறது. சுஜித் ஜீவி என்ற இளைஞர் பாடலை எழுத, சதீஷ் ரிச்சர்ட் என்ற இளைஞர் இசையமைத்திருக்கிறார்.
நீங்களும் கேட்டுப் பாருங்கள்.