

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பாகுபலி படத்திலிருந்து வசனம் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
5 மாதமாக நிலவும் கரோனா காரணமாக உலகமே முடக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் இன்னமும் ஊரடங்கு நிலவுகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் தாங்கள் இந்த ஊரடங்கில் பொழுதை எவ்வாறு கடக்கின்றன என்பது குறித்து வீடியோ பதிவுகளை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது டிக்டாக் பக்கத்தில் இந்திய திரைப்படங்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதில் வார்னர் குடும்பத்தினருடன் செய்யும் டிக் டாக் வீடியோக்கள் பெரும் வைரலாகி வருகின்றன. ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் பாடல்களுக்கு டேவிட் வார்னர் தனது குடும்பத்தினருடன் செய்த டிக் டாக் வீடியோ செய்து வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது.
இந்த நிலையில் தற்போது இந்திய அளவில் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தின் வசனம் ஒன்றை பேசிடிக்காட்டி வார்னர் வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.