

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய 'கேர்' இமோஜிக்கு நெட்டிசன்கள் பெரும் வரவேற்பு நல்கி வருகின்றனர்.
இது இமோஜிக்களிள் காலம் என்று சொல்லும் அளவுக்கு இன்றைய தலைமுறை இமோட் ஐக்கான்களுடன் ஒன்றினைந்து விட்டனர்.
இமோஜிக்கள் இல்லாத வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறையினரால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது
அவர்கள் தங்கள் உணர்வுகளை வார்த்தைகளில் தெரிவிப்பதைவிட இமோஜிக்களில் தெரிவிக்கவே விரும்புகிறார்கள்.
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என சமூக ஊடகங்களில் எந்தச் செய்தியும் இமோஜிக்கள் இல்லாமல் பகிரப்படுவதில்லை.
இதன் காரணமாக சமூக ஊடக நிறுவனங்கள், பயனாளர்களை கவர புதிய புதிய இமோஜிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய இமோஜி ரியாக்சன் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக்கில் ஏற்கனவே உள்ள ஆறு இமோஜிகளுடன் கையில் இதயத்தை தாங்கி இருக்கும் புதிய இமோஜியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் லைக், லவ், ஹாஹா, வாவ், சேட், ஆங்க்ரி என விதவிதமான ஐக்கான்கள் இருந்த நிலையில் கரோனா காலத்தில் தங்களின் அரவணைப்பு உணர்வைப் பகிர கேர் இமோஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய இமோஜி இணைய தள பயனாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.