

கரோனா வைரஸ் பாதிப்பில் உள்ளவர்களுக்கும் பாதித்தவர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் மருத்துவச் சேவைகளை அளித்துவரும் தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டி ஒரு காணொலியைத் தயாரித்திருக்கிறது குப்பத்து ராஜா எனும் யூடியூப் சேனல்.
'நம்ம முதல்வருக்குத் தோள்கொடுப்போம்' எனத் தொடங்கும் பாடலை எழுதி, இசையமைத்துப் பாடியிருக்கிறார் ஜீவராஜா. தேவையில்லாமல் ஊர் சுற்றுவதால் ஏற்படும் விளைவுகளை அச்சுறுத்தும் வகையில் வெளிப்படுத்தும் பல பாடல்கள் வந்திருக்கின்றன. பாடலின் கருத்துகள் நேர்மறைச் சிந்தனையைக் கேட்பவரின் மனத்தில் எழுப்பும்படி ஒலிக்கின்றன.
தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களின் தன்னலமற்ற சேவை, போக்குவரத்துக் காவலர்கள், சட்டம், ஒழுங்கு காவலர்களின் கனிவான அதே சமயம் கண்டிப்பான சேவை, எளிய மனிதர்களின் பசியைப் போக்குவதற்கு அம்மா உணவகம், நியாய விலைக் கடைகளில் விலையில்லாப் பொருட்கள் வழங்குவதோடு, உதவித் தொகையையும் வழங்கியிருக்கும் தமிழக அரசின் செயலையும் கரோனா விழிப்புணர்வோடு சேர்த்து மக்களுக்கு கொண்டுசெல்கிறது.
கரோனா விழிப்புணர்வோடு அரசின் நடவடிக்கைகளையும் பாராட்டும் இந்தப் பாடலைக் காண: