Published : 07 Apr 2020 04:29 PM
Last Updated : 07 Apr 2020 04:29 PM

சுயலாபத்திற்காகவும் பல அமெரிக்க மருந்து நிறுவனங்களின் லாபத்திற்காகவும் ‘ஹைட்ராக்சிகுளோரோகுய்ன்’ பரிந்துரையா? - அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் மீது எழும் கடும் சந்தேகங்கள்

கரோனா வைரஸ் தொற்றுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாடுகள் நீக்கமற, ஐயம்திரிபற நிரூபிக்கப்படவில்லை, மருத்துவர்கள், உதவிப்பணியாளர்கள் ஆகியோர்களுக்கு கரோனா நோயாளிகளிடமிருந்து பரவாமல் தடுக்க ஹைட்ராக்சி குளோரோகுய்ன் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதுவும் கூட ஒரு சில ஆய்வுகளின் அடிப்படையில் மட்டும்தானே தவிர நீக்கமற நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல.

இந்த ஆய்வும் கூட தனிப்பட்ட நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தான காலக்கட்டங்களில் முயற்சி செய்யப்பட்டு ஒருசில சந்தர்ப்பங்களில் வெற்றி கண்டதன் அடிப்படையில்தானே தவிர கொள்ளை நோய் தடுப்பாக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் இன்னமும் அங்கிகரிக்கப்படவில்லை, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

மேலும் இதனை சிலர் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொண்டு இறந்துள்ளது, சிலர் மருத்துவமனைகளி சிகிச்சையில் இருந்து வருவதும் தெரிந்த பிறகு தினமும் 5 முறையாவது அதிபர் ட்ரம்ப் இந்த மருந்தின் பெயரை உச்சரிக்காமல் இருப்பதில்லை என்று நியூயார்க் டைம்ஸ் கடும் விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இருதய நோயாளிகளுக்கு இந்த மருந்தை பரிந்துரை செய்யலாகாது என்று கூறப்பட்டு வரும் போது ட்ரம்ப் ”ஆம் ஹார்ட் பிரச்சினை உள்ளது” என்று கூறிவிட்டு அதனை புரோமோட் செய்யும் விதமாக “நான் டாக்டர் அல்ல ஆனால் எனக்கு காமன் சென்ஸ் உள்ளது” என்று கூறியுள்ளார்.

ரியல் எஸ்டேட் விற்பனையாளர் போல் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் குறித்து ட்ரம்ப் கூவிக் கூவி விற்பது ஏன் என்ற சந்தேகங்கள் அங்கு வேறு விதங்களில் எழுந்து வருகின்றன. ‘பயன்படுத்தினால் என்ன? நாம் என்னத்தை இழக்கப் போகிறோம்?’ என்று அவர் 5 முறை கேட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி அறிக்கை சந்தேகம் எழுப்பியுள்ளது.

அமெரிக்க அரசு நியமித்த தொற்று நோய் ஒருங்கிணைப்பாளரும் மிகப்பெரிய வைரஸ் நிபுணருமான ஆண்டனி ஃபாசி என்ற மருத்துவரும் ஹைட்ராக்சி குளோரோகுய்ன் பயன்பாடு குறித்து சந்தேகத்தையே எழுப்பியுள்ளார், இதனால் அமெரிக்க கரோனா வைரஸ் பணிக்குழுவுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளது, மேலும் இந்தியா அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயினை சப்ளை செய்யவில்லை எனில் பழிக்குப் பழி வாங்குவோம் என்ற தொனியில் மிரட்டியுள்ளார்.

இவ்வளவு தீவிரமாக நிரூபிக்கப் படாத இந்த மருந்துக்கு ட்ரம்ப் வக்காலத்து வாங்கியுள்ளது அவரது நோக்கம் குறித்த சந்தேகங்களை அமெரிக்க அறிவுலகில் ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஒரு முறையான சிகிச்சையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால் அதனால் ஏகப்பட்ட அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட லாபம் கிடைக்கும் இந்த லாபத்தில் அதிபர் ட்ரம்புடன் நட்பு வட்டத்தில் உள்ள மூத்த செயலதிகாரிகல் பங்குதாரர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

பிரான்ஸில் Plaquenil என்ற பிராண்ட் பெயரில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோ குயின் தயாரிப்பு நிறுவனமான சனோஃபி என்ற நிறுவனத்தில் அதிபர் ட்ரம்புக்குச் சிறிய பங்கிருப்பதாகவும் நியூயார்க் டைம்ஸ் பகீர்க்குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளது.

புரூக்ளினைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர் நியுயார்க்டைம்ஸ் இதழில் கூறும்போது, தற்போதைய தேவை அதிகரிப்பு கவலையளிக்கிறது, இது முடக்கு வாத ஆயுள் நோயாளிகளுக்கான மருந்தாகும். இதனை நியூயார்க் கவர்னர் கியுமோவும் அதிபர் ட்ரம்ப்பும் சர்வசாதாரணமாக கரோனாவுக்கு பரிந்துரைப்பது எந்த வித அறிவியல் ஆதாரமுமற்ற செயலாகும். தவறான நம்பிக்கை அளிப்பது மோசம் என்றார்.

ஸ்வீடனில் கரோனா நோய்க்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அளிப்பதை நிறுத்தி விட்டனர் என்று கூறும் நிபுணர்கள், இந்த மருந்து கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்கின்றனர்.

நாட்டு மருத்துவர் விளாதிமீர் செலென்கோ என்பவரின் பரிந்துரையின் பேரில் ட்ரம்ப் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசினை முன்னதாக பரிந்துரை செய்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

டாக்டர் ஃபாஸி எச்சரிக்கையை உதாசீனப்படுத்திய அதிபர் ட்ரம்ப், “டாக்டர் ஃபாஸி கூறும் ஆய்வுகளுக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது, நமக்கு 2 மணி நேரம் கூட இல்லை” என்றார்.

இந்நிலையில் பிரெஞ்ச் ஹைட்ராக்சி குளோரோகுய்ன் மருந்து உற்பத்தி நிறுவனமான சனோஃபியில் பெரிய பங்குதாரர் பிஷர் சொத்து மேலாண்மை நிறுவனமாகும் இந்த பரஸ்பர நிதிய நிறுவனத்தை நடத்துபவர் கென் பிஷர் இவர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சிக்கு பெரிய நன்கொடையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு மட்டுமல்லாமல் ட்ரம்ப் பேச்சைக் கேட்டு நிறைய மருந்து உற்பத்தியாளர்கள் ‘ஜானரிக்’ பெயரில் ஹைட்ராக்சி குளோரோகுய்னை உற்பத்தி செய்கின்றனர், இதில் ஒரு நிறுவனம் அம்நீல் பார்மசூட்டிக்கல் நிறுவனமாகும் இதன் இணை நிறுவனர் அதிபர் ட்ரம்புட கோல்ஃப் ஆடுபவர். அதிபர் ஆன பிறகும் இவருடன் இருமுறை ட்ரம்ப் கோல்ஃப் ஆடியுள்ளார்.

இவ்வாறு அமெரிக்காவில் ட்ரம்பின் நோக்கத்தை விமர்சித்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x