Published : 07 Mar 2020 01:28 PM
Last Updated : 07 Mar 2020 01:28 PM

நெட்டிசன் நோட்ஸ்: அன்பழகன் மறைவு - மற்றுமொரு திராவிடத் தூண் சாய்ந்தது

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் காலமானார்.

இந்த நிலையில் க.அன்பழகன் மறைவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Poo sachinist

பெரியார்
அண்ணா
கலைஞர்
பேராசிரியர்

திராவிடப் பேராசான்கள்

UmaMaheshVaran P Selvam

ஒரு மரணம் உங்களை அனாதையாக்கினால்
மரணித்தவன் மாமனிதன்.
ஒரு மரணம் ஒரு இனத்தை அனாதையாக்கினால்
மரணித்தவன் நம் குல இலச்சினை.

Frankamit

நட்பிலக்கணம்
#பேராசிரியர்

Ramkumar D Thooyamani

கொள்கையை ஏற்றுக்கொள்வது என்பது வேறு. ஏற்றுக்கொண்ட கொள்கையின்படி வாழ்வது என்பது வேறு. நம் இனமான #பேராசிரியர் இரண்டாமவர். அதனால் நாம் அவரை "இனமான" என்று விளிக்கின்றோம். உடலுக்குத்தான் மறைவு பேராசிரியரே. உங்களுக்கு அல்ல..

Murali sai

கலைஞரின் முதுகில் குத்தாத
தலைவர்களே இல்லா இவ்வுலகில்
கலைஞரின் காலில் முள்கூட
குத்தாமல் காத்தவர் நீங்கள்…Loudly crying faceLoudly crying face
-நானா.

Sukumar Santhanam

நட்பின் இலக்கணமாக நம்பிக்கை அளித்து ஆச்சிரியமாக வாழ்ந்த இனமானப் பேராசிரியர் இறைவனடி சேர்ந்தார்.

Chandrasekar G

வீரவணக்கம் இனமானப் #பேராசிரியர் அவர்களே

கார்த்தி

எம்.ஜி.ஆர். திமுகவை உடைத்து தனிக்கட்சி ஆரம்பித்தபோது நம்பிக்கைக்குரிய பலர் அவருடன் செல்ல "நண்பேன்டா"என கருணாநிதியின் கரம் பற்றி நின்றார். அதனால் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னால்
மனிதன்
அன்பழகன்
சுயமரியாதைக்காரன்
அண்ணாவின் தம்பி
கலைஞரின் தோழன் எனக் கூறினார்.

Sona Panneer Selvam

இனமானப் பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு வேதனை அளிக்கிறது.

shiva shankar

பேராசிரியர் என்ற இந்தப் பதத்திற்கு மட்டும், இவரைத் தவிர வேறு யாரையும் இன்றைக்கும் உருவகம் செய்துவிட முடியாது. அவர் படித்ததனால் மட்டுமே அதைப் பெற்றுவிடவில்லை. அவர் நடத்தையாலும் அதை உறுதி செய்தார்.

kkanwarali

முதலில் நான் மனிதன்;
இரண்டாவது நான் அன்பழகன்;
மூன்றாவது நான் சுயமரியாதைகாரன்;
நான்காவது நான் அண்ணாவின் தம்பி;
ஐந்தாவது நான் கலைஞரின் தோழன்;
#பேராசிரியர் #RIPPerasiriyar

அருண்

பேராசிரியர் அன்பழகனின் மறைவு திமுகவுக்கு மட்டுமல்ல, திராவிட இயக்கத்துக்கும் பெரும் இழப்பு. சமகால அரசியல் உலகில், ஆத்மார்த்தமான நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். பிரிவால் வாடும் கட்சியினர் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

இரவிரங்கா

மனிதனே! பகுத்தறிவாளனே! அண்ணாவின் தம்பியே! கலைஞரின் இனமான நண்பனே!
பேராசிரியர் அன்பழகன் அவர்களே!
உங்கள் பிரிவால் திமுகவே வாடுகிறது.

KangeyanD

இனமானத் தலைவர் பேராசிரியர் அன்பழகன் இயற்கை எய்தினார். ஒரு மூத்த திராவிடத் தலைவரை நாடு இழந்து விட்டது. அவரைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புன்னகை மன்னன்

*இனமான பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்*

ஆண்டுகள் திமுக பொதுச்செயலாளர்

9 முறை எம்எல்ஏ

ஒரு முறை எம்எல்சி

சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் பேராசிரியர்.

தேசியராஜ்

தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய இயக்கத்திற்காக, தத்துவத்திற்காக வாழ்ந்த பேராசிரியர் க.அன்பழகனின் நினைவைப் போற்றுவோம்.

சயின்டிஸ்ட் சந்துரு:)

அன்பான பேராசிரியர் உண்மையான உற்ற நண்பர். நண்பர் என்ற வார்த்தைக்கு ஒரு எடுத்துக்காட்டு எனக்கு தெரிந்து பேராசிரியர் அன்பழகன் மட்டுமே..:)) #RipAnbazhagan

பொன்னன்

விடை பெற்றார் திமுகவின் பொதுச்செயளாலர் பேராசிரியர் க.அன்பழகன்.

இந்த இயக்கத்தின் இனமானப் பேராசிரியர், தலைவர் கலைஞரின் உற்ற நண்பர்.

மிகுந்த அரசியல் பண்பும் நாகரிகமும் கொண்டவர். எதிர்க் கட்சியினரை ஒருமையில் வசைபாடாதவர்.

திமுகவின் கொள்கைமான்.

செ. பாலமுருகன்

பேராசிரியர் அன்பழகன் மறைந்தார். பெரியார், பேராசான், கலைஞரோடு பகுத்தறிவு பாதையில் பயணித்த அவரின் மறைவு தமிழகத்திற்குப் பேரிழப்பாகும்.

யாளி

மற்றுமொரு திராவிடத்தூண் சாய்ந்தது . பேராசிரியர் அன்பழகன் :-(

Abul kalam jailany

பேராசிரியர் அன்பழகன் மறைந்தார்

போய் வாருங்கள் இனமானப் பேராசிரியரே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x