

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்து முடிந்தது. பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக 7
தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து அரவிந்த் கேஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
I.kaleelrahman
மதவாத அரசிலுக்கு எதிரான வெற்றி.
ஆம் ஆத்மி, அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
heiksamee
வாழ்த்துகள். டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி. பாஜகவிற்குப் பாடம் புகட்டும் மாஸ்டர் (அரவிந்த் கேஜ்ரிவால்) இவர்தான்.
bagavathi
நேர்மைக்குக் கிடைத்த வெற்றி.டெல்லி தேர்தல். வாழ்க வளர்க ஆம் ஆத்மி கட்சி.
Pandian V
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி என்பதைவிட பாஜக படுதோல்வி என்பது சந்தோசமாக இருக்கிறது . அதாவது மனதில் அவ்வளவு வெறுப்பு படிந்திருக்கிறது
இனிமேலாவது மக்களின் நியாயமான நேரடிப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துத் தீர்வு காண்பார்களா ?
நைனா
ஆம் ஆத்மி வெற்றி பெறுவது மகிழ்ச்சியே. அதே நேரம் காங்கிரஸ் அழிந்துவருவது தேசத்திற்கு நல்லதாகத் தோன்றவில்லை. நாட்டை யாருக்கும் பட்டயம் எழுதிகொடுத்து வைப்பதில் உடன்பாடில்லை. முன்பு காங்கிரஸும் இப்படித்தான் எதிர்க்க வலுவான ஆள் இல்லாமல் இருந்தது. மக்களாட்சி தேசத்தில் எதிர்க் கட்சி பலம் வேண்டும்.
RAMANI SANKAR
ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவதாக தெரிந்தாலும், EVM ஐ தவிர்க்க வேண்டும் என்று எல்லா கட்சிகளும் போராட வேண்டும். பாஜகவை நம்பவே முடியாது. மக்கள் விரோத பாஜக தோல்வியடைந்தது நடுநிலையாக இருக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
Ranjith KD
சிறப்பான தரமான வெற்றி. ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்தோர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
TV BALASUBRAMANIAN
பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் மீண்டும் வெற்றி. ஆம் ஆத்மி கட்சி வெற்றிப் பாதையில்.
Hasan Kalifa
2019 பொதுத்தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற வாக்கு சதவீதம் 18%. இப்போதைய சதவீதம் 54%.
2019 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 23%. இப்போதைய சதவீதம் 5%.
Pamban Mu Prasanth
டெல்லியில் தீவிர இடதுமில்லை... தெளிவான வலதுமில்லை...
தேவை ஒன்று இருந்தது... அதை தேடிப் பிடித்துக் கொண்டார் அரவிந்த்... தேடிக்கொண்டிருக்கிறார் அமித்...