

'மாஸ்டர்' படத்தின் நெய்வேலி படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, நடிகர் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து செல்ஃபி வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
நெய்வேலி சுரங்கத்தில் விஜய் சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தது 'மாஸ்டர்' படக்குழு. இதில் விஜய் - ஆண்ட்ரியா - விஜய் சேதுபதி மூவரும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இந்தப் படப்பிடிப்பில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு தினமும் விஜய் ரசிகர்கள் கூடத் தொடங்கினார்கள். அப்போது விஜய் வெளியே வந்து, ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டுப் போகும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாயின.
இதனைத் தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 9) ரசிகர்களுக்கு இடையே எடுத்த செல்ஃபியை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார் விஜய். அதில் 'நன்றி நெய்வேலி' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
பிரபலங்கள் பலரும் இந்த செல்ஃபி புகைப்படத்தை குறிப்பிட்டு பிரபலங்கள் பல தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டனர்.
அவற்றில் சில பதிவுகள்: