

ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் திடீரென சில வீடியோக்கள் வைரலாகி ட்ரெண்டாகி விடும். அந்தவகையில் வாழைப்பழ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
ஜஸ்டிஸ் மோஜிகா என்ற நபர் தனது 2 வயது மகளுக்கு மோசமான கிறிஸ்துமஸ் பரிசு என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், வாழைப்பழம் ஒன்றை கலர் பேப்பரில் சுருட்டி பரிசுப்பொருள் போன்று தனது மகளுக்கு வழங்குகிறார்.
அந்தப் பரிசை ஆர்வமாகத் திறக்கும் அவரது மகள் அந்த வாழைபழத்தைக் கண்டதும் பனானா..பனானா.. உற்சாகமாகிறாள். வாழைப்பழத்தைக் கண்டதும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று குழந்தை கூறுகிறது. இந்த வீடியோதான் ட்விட்டரில் கடந்த சில நாட்களாக வைரலானது.
சுமார் 1.5 மில்லியன் மக்கள் இவ்வீடியோவை லைக் செய்திருந்தனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ரீ ட்வீட் செய்துள்ளனர்.
இவ்வீடியோவைத் தொடர்ந்து பலரும் தங்கள் குழந்தைகளுக்கு வாழைப்பழத்தைப் பரிசாகக் கொடுத்து அவர்கள் குழந்தைகளின் முக பாவத்தையும் வீடியோவாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
குழந்தைகள் உலகில், சிறு பரிசுகள் அவர்களுக்கான பொக்கிஷங்கள் என்பதை இவ்வீடியோவில் உள்ள சிறுமி நினைவுபடுத்தியுள்ளார்.
வீடியோவை பார்க்க..