Published : 23 Dec 2019 06:06 PM
Last Updated : 23 Dec 2019 06:06 PM

நெட்டிசன் நோட்ஸ்: #15YearsOfDhoni - ஒரு சகாப்தம்!

கிரிக்கெட் உலகின் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் தனது பயணத்தைத் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்நிலையில் தோனியின் சாதனைகளைப் பதிவிட்டு அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #15YearsOfDhoni என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

சிவா

15 வருடம் இந்தியா அணிக்காக விளையாடி அனைத்து சாதனைகளையும் செய்த ஒரே கேப்டன் கூல் தோனி.


R

சச்சின் கிரிக்கெட் கடவுளா இருக்கலாம். அந்தக் கடவுளுக்கும் வேர்ல்டு கப் எனும் வரம் கொடுத்தவர் தல தோனி


ராஜ் தமிழன்

வெற்றியை நோக்கித்தான் எல்லோரும் பயணிப்பாங்க. ஆனா, தோல்வியை எதிர்த்து பயணிப்பதையே தன்னோட பாதையா தடம் பதித்தவர் #தோனி King of Kings

கானவன்

வெற்றியைப் பகிர்வதும், தோல்வியைத் தன் தோளில் மட்டும் சுமப்பதும்தான் ஒரு தலைவனின் சிறந்த தகுதி. அதை கேப்டனாக இருந்து காலம் முழுவதும் செய்தவர் தோனி.

தோனியை விட சிறந்த விக்கெட் கீப்பர் & பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் & கேப்டன் இந்தியாவுக்கு கெடைச்சதே இல்ல.

Thala Rasigan Guru

சச்சின் அவுட் ஆனா டிவிய ஆஃப் பண்ணிட்டு போவோம்னு சொன்னவங்க தோனி இருக்கான் எப்படியாது ஜெயிக்க வைப்பான்னு கடைசி வரை மேட்ச் பாக்க வெச்ச நம்பிக்கைதான் அவரோட வெற்றி.

Harley_Quinn

கேப்டன் பதவி மட்டுமே போதாது கேப்டன் ஆக.... பத்து பேரையும் எப்டி வழி நடத்தணும்னு தெரியணும்...

கேப்டன் என்ற வார்த்தை க்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு... தோனி சகாப்தம்!

ஜிம்பலக்கடி பம்பா

சின்ன வயசுல நான் கங்குலி, சச்சின், ட்ராவிட் ஆட்டத்தை ரசிச்சிருக்கேன். தோனியையும் அப்டிதான் ஆரம்பத்துல ரசிச்சேன். ஆனா அவங்க அனைவரையும் விட தோனி மேல ஒரு ஈர்ப்பு வந்தது. அப்போ இருந்து இப்போ வரையும் இனி என்றென்றும் தோனிதான் ஃபேவரிட்னு முடிவாகிடுச்சு மனசுல.

Bala Jith

தோனி கிட்ட ரொம்ப Admire ஆன விஷயம்!

தான் கேப்டனா பதவி ஏத்துக்கிட்ட பிறகு கிரிக்கெட்டை ஆண்ட GOAT Australia அணியை 29 வருஷம் கழித்து அவங்க நாட்டுலயே CB - Odi Series 2008 வெற்றி பெற்றது!

48 வருஷம் கழித்து அவங்களை நம்ப நாட்டுல white wash பண்ணது!

தளபதி தனா

வருங்காலத்துல தோனியோட இடத்துல ஒரு நல்ல Batsman வரலாம். ஒரு நல்ல wicketkeeper வரலாம். ஒரு நல்ல Captain வரலாம். ஆனா திரும்பவும் இந்தியாவுக்கு ஒரு தோனி கிடைக்கமாட்டார்.


Kavi Msd

என்றும் #தோனி
எப்போதும் #தோனி
எல்லாமே #தோனி

thiruvaidu2

தோனி... ஒன் மேன் ஆர்மி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x