

பல பிரபலங்கள், விஐபிகள், விவிஐபிகள் தங்கள் யூடியூப் சேனலில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைக் கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். ஆனால், ஒரு ரயில் காணொலியை 23 மில்லியன் பேர் (2.3 கோடி) பார்த்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் சேனலைப் பொறுத்தவரை ஆயிரத்தில், லட்சத்தில், பத்து லட்சத்தில் பார்வையாளர்களை ஈர்ப்பது ஒவ்வொருவர் லட்சியமாக இருக்கும். அதிக பார்வையாளரைப் பார்க்க வைப்பது ரஜினியா? கமலா? அஜித்தா? விஜய்யா? யார் அதிக பார்வையாளர்களை வைத்துள்ளார்கள் என அவரவர் ரசிகர்கள் அடித்துக்கொள்வதும் அவ்வப்போது நடக்கும்.