

இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்கள் வாழ்த்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
ரஜினி வேதா
தமிழ் சினிமா ஒரு புத்தகம் எனில் அதன் அட்டைப் படம் #ரஜினிதான்.
அட்டைப் படத்தைப் பார்த்து புத்தகத்தைத் தீர்மானிக்கக் கூடாதுதான்.
ஆனால், புத்தகத்துக்கான அடையாளம், அந்த அட்டைப் படம்தான்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா!
திருச்சி கோசல்
நான் மட்டும் தான் இங்க சூப்பர் ஸ்டார்னு ரஜினி என்னைக்குமே சொன்னது கிடையாது.
ரஜினியைத் தவிர யாருமே இங்க சூப்பர் ஸ்டாரா இருக்க முடியாதுன்னு உலகமே சொல்லுது.
UᴅʜᴀʏA
பட்டத்துக்கு ஆசைப்படும் நடிகர்கள் மத்தியில்... அந்தப் பட்டமே ஆசைப்படும் ஒரே பெயர் "ரஜினிகாந்த்"
HBD Thalaivaa
மொத்த இந்தியத் திரையுலகமும் கொண்டாடுது!
தமிழ் சினிமாவின் பெருமிகு அடையாளம்
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கலைமதி
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த் சார்.
தோழர் ஜென் சித்தர்™
கோலிவுட் வரலாற்றின்
ஸ்டைலிஷ் பக்கங்களில்
ஆளுமை கலந்த நடிப்பின் ஒற்றைக் குறியீடு ரஜினிகாந்த்...!
GOPINATH
மனதை மயக்கும் மந்திரம்
சாகசம் தெரிந்த தந்திரம்
எல்லோரையும் மயக்கும் எந்திரன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
hariprasath
ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து உள்ளங்களிலும் அண்ணாமலை அருணாச்சலம் அருள் பெற்று அபூர்வ ராகமாய் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் சினிமா பேட்டையின் முடிசூடா மன்னன் முத்தான அதிசயப் பிறவி எங்கள் அன்புள்ள ரஜினிகாந்த்
பிறந்த தினம் இன்று..
®️ekha®️ajini
என்றும் இளமை
நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும் !
Selvaraj
அன்புத் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த இனிய பிறந்த நாளில் அவர் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளையும் பெர ஆண்டவன் தந்து ஆசி அருள வேண்டுகிறேன்.
Ponnu_1991
#HBDSuperstarRajinikanth #Darbar பிறந்த நாள் வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ..!❤️❤️❤️ எத்தனையோ கருத்து இருந்தாலும் எப்பொழுதும் உங்கள் ரசிகன் நான் சினிமாவில்..! அரசியலில் எப்பொழுதும் எதிர்ப்பேன் அரசியல் வேறு சினிமா வேறு..!
SKP KARUNA
அகவை 70 க்குள் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நூறாண்டுகளுக்கும் மேலாக நிலைத்த புகழுடனும், எப்போதும் அவர் நாடும் மன அமைதியுடனும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்.
டீ
Pandidurai
என் எண்ணங்களை அழகாக்கிய என் குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.