

2019-ல் கூகுள் தேடல் எந்திரத்தில் அதிகம் தேடப்பட்டவை பட்டியலில் ஐசிசி உலகக்கோப்பை 2019 அதிகபட்ச தேடலுக்கான இடத்தைப் பிடிக்க, ஆளுமைகளில் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் தேடலில் முதலிடம் வகித்துள்ளார்.
ஐசிசி உலகக்கோப்பை 2019 தேடலில் முதலிடம் பெற, அடுத்தடுத்த இடத்தில் சந்திரயான் -2, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ஆகியவை இடம்பெற்றுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாப் ட்ரெண்ட்களில் கபீர் சிங் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.
அதே போல் அதிகம் தேடப்பட்ட சொற்றொடர்களில், ஹவ் டு வோட், ஹவ் டு கெட் ஃபாஸ்டேக், ஹவ் டு செலக்ட் சேனல்ஸ் ஏஸ் பர் ட்ராய், வாட் இஸ் ஆர்டிக்கிள் 370, வாட் இஸ் ஹவ்டி மோடி, வாட் இஸ் டி.எல்.எஸ். மெத்தேட் இன் கிரிக்கெட், வாட் இஸ் ஆர்ட்டிக்கிள் 15 போன்றவை அதிகம் ட்ரெண்டிங் ஆகின.
அதிகம் தேடப்பட்ட ஆளுமைகளில் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் முதலிடம் பிடித்துள்ளார். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் லதா மங்கேஷ்கர், யுவராஜ் சிங் ஆகியோர் பெயர்கள் அதிகம் தேடப்பட்டன.
விளையாட்டில் கிரிக்கெட் உலகக்கோப்பை, புரோ கபாடி லீக், விம்பிள்டன், கோபா அமெரிக்கா, கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் அதிகம் விரும்பித் தேடப்பட்டுள்ளன.