

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி இன்று தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்த பதிவை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அனுஷ்காவுடன் இருக்கும் கருப்பு - வெள்ளை புகைப்படத்தைப் பதிவிட்டுப் பகிர்ந்திருந்தார்.
அப்பதிவில் கோலி, “நிஜத்தில் காதல் மட்டுமே உள்ளது. வேறொன்றும் இல்லை. உங்களை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்தும் ஒருவருடன் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கும்போது உங்களிடம் ஒரு உணர்வு மட்டுமே உள்ளது. அது நன்றி மட்டுமே” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் அனுஷ்கா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் , “மற்றொருவரை நேசிப்பது என்பது கடவுளின் முகத்தைப் பார்ப்பதைப் போன்றது. காதல் உணர்வு மட்டுமல்ல. அதைவிட மேலானது. அது ஒரு வழிகாட்டி, உந்துசந்தி, உண்மைக்கான பாதை. இதுபோன்ற காதலை நான் பெற்றதற்கு முழுமையாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.