நெட்டிசன் நோட்ஸ்: பாரதியார் பிறந்த நாள் - புகழ் வணக்கம் நம் கவிக்கு!

நெட்டிசன் நோட்ஸ்: பாரதியார் பிறந்த நாள் - புகழ் வணக்கம் நம் கவிக்கு!
Updated on
1 min read

மகாகவி பாரதியின் பிறந்த நாளைத் தொடர்ந்து அவருக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

தினகரன்

பல வேடிக்கை மனிதர்களைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

Rajesh

புகழ் வணக்கம் நம் கவிக்கு.

பிலிப்ஸ் ஜெயசீலன்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து பேரிருளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ
#பாரதியார்

ஆனந்த்.க

நல்லதோர் வீணை செய்தே!
அதை நலங்கெடப் புழுதியில் -எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி!
எனை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்.
#பாரதியார்

Pandidurai

இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் ...

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்...

அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே...

காலத்தால் அழியாத கவி நிலா மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று..!!!


மௌவல் (டாவின்சியின் காதலி)

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்;

#பாரதியார்

Vιnothkanth

“வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
வாழு மனிதருக் கெல்லாம்;
பயிற்றுப் பலகல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்”
– #மகாகவி #பாரதி


அரவான்

நோவாவின் பேழையால் தப்பிக்க முடியாத ஒரே கடல், உனது கவிக்கடல் மட்டுமே.


S P Swaminathan

ஆகாதது அவனுக்கு
அடிமைத்தனம் மட்டுமே!
ஆதிக்கம் எதுவெனினும்
எதிர்த்து அவன் பாடினான்!

மேட்டுக் குடியினிலே
பிறந்தவன் எனினும்,
காக்கைக் குருவியைத் தன்
சாதிசனம் என்பான்!
காக்கைச்சிறகினிலே கண்ணனையே காண்பான்!
வாழ்க்கையிலே தோற்றாலும்
வரலாற்றில் வென்றான்.# பாரதி பிறந்த நாள்.


karthi Thondamuthur

கவியாகப் பிறந்து,
கவியாக வாழ்ந்து,
கவியாக இறைவனடி சேர்ந்தார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் பாரதி


bala ji

பாரதம் கண்ட கவிஞர்களில்
பாரதி நீர் தனித்துவமானவன்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in