

2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் சிறந்த விளையாட்டு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் ட்விட்டர் பக்கங்களை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் இந்தியா #ThisHappened2019 என்ற ஹேஷ்டேக்கில் 2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் நடந்த சாதனைப் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
அதில் பொழுதுபோக்கு, அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைகளில் உள்ள பிரபலங்கள் (லைக், ரீட்விட், ட்வீட், கமெண்ட், ரசிகர்களுடான உரையாடல்) பலரது சாதனைகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் சிறந்த விளையாட்டு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் ட்விட்டர் பக்கங்களை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
அதில் வீரர்களில் கோலிக்கு முதலிடமும், தோனிக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.
கோலி மற்றும் தோனியை தொடர்ந்து ரோஹித், சச்சின், ஷேவாக், ஹர்பஜன் சிங் இடம்பெற்றுள்ளன. (இப்பட்டியலில் இடம்பெற்ற 10 பேருமே கிரிக்கெட் வீரர்கள் ஆவர்)
விளையாட்டு வீராங்கனைகளில், பிவி சிந்து முதலிடம், ஹிமா தாஸ் இரண்டாம் இடமும் பெற்றுள்ளன.
இவர்களை தொடர்ந்து சாய்னா, மிதாலி ராஜ், ஸ்மிருத்தி மந்தனா ஆகியோர் இடம்பெற்றுள்ளன.