

பிரான்ஸில் காரின் மையப்பகுதியை உடைத்துக்கொண்டு வளர்ந்த மரத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. பலரும் இதனை அதிசயம் என விவரித்தனர்.
பிரான்ஸின் உள்ள நன்டஸ் நகரத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காரின் நடுவே மரம் ஒன்று நெடுந்தூரம் திடீரென வளர்ந்துள்ளதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இதனை மாயாஜாலம் என விவரித்தனர். இது தொடர்பான புனைகதைகள் பரவத் தொடங்க, காரின் அடியிலிருந்து மரம் எவ்வாறு வளர்ந்தது என்ற உண்மையும் வெளிவந்தது.
பிரான்ஸில் ராயல் டீலக்ஸ் தியேட்டர் கம்பெனியால் அமைக்கப்பட்ட ஆர்ட் வொர்க் இது என்பது தெரியவர இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் ஏமாற்றமடைந்தனர். எனினும் இது தொடர்பான பொய்ச் செய்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.