Published : 26 Nov 2019 12:32 PM
Last Updated : 26 Nov 2019 12:32 PM

அன்று நடனத்தால் பிரபலமான இந்தூர் போக்குவரத்து காவலர் இன்று ஆத்திரத்தால் சர்ச்சைக்குள்ளானார்

இந்தூர்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ரஞ்சித் சிங் நாடறிந்த போக்குவரத்து காவலர். அவரின் நடனம் அவருக்கு அந்தப் புகழைப் பெற்றுத்தந்தது.

அவர் நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதும், பிரபல பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சன் போல மூன் வாக் எனப்படும் நடன அசைவை அவர் அரங்கேற்றுவதும் காண்போரைக் கவரத் தவறியதில்லை. சிக்னலில் நிற்காமல் செல்லும் பழக்கம் கொண்டவர்கள்கூட அவரின் நடனத்தைப் பார்க்க நின்று சென்றனர். நாளடைவில் அவர் பணியாற்றும் அப்பகுதியில் போக்குவரத்து சீராக இருக்கத் தொடங்கியது.

சமூக வலைதளம் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சேர்ந்தது. போக்குவரத்துக் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்தையும், பாராட்டையும் ரஞ்சித் சிங் பெற்றார். நாளடைவில் இந்தூர் வரும் சுற்றுலாப் பயணிகள்கூட ரஞ்சித் சிங்கைப் பார்ப்பதற்காக அவர் பணி புரியும் இடத்திற்கு வந்து செல்வது வழக்கமாகியது. அவருக்கு 'சிங்கம்' என்ற அடைமொழியும் மக்களால் வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் ரஞ்சித் சிங்கி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுட்தியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் நோ என்ட்ரி ஜோனில் நுழைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை ரஞ்சித் கன்னத்தில் அடிப்பதும் காலால் அவரை எட்டி உதைப்பதும் இடம் பெற்றுள்ளது.

இதனைப் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் ரஞ்சித்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதில் முகநூல் வாசி ஒருவர்ம் அந்த ஆட்டோக்காரரை அடித்துத் துன்புறுத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அவர் தவறே செய்திருந்தாலும் அவரை அடிக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. இந்தூரின் அடையாளத்தைக் காப்பாற்ற இயலாவிட்டாலும் அதனை சிதைக்காதீர்கள் என வன்மையாகக் கண்டித்துள்ளார்.

டேன்சிங் காப் டூ டேரிங் காப் என சிலர் விமர்சித்துள்ளனர். அதாவது நடனமாடும் காவலரில் இருந்து அச்சுறுத்தும் காவலர் என்ற பாணியில் விமர்சித்துள்ளனர்.

38 வயதான ரஞ்சித் சிங்குக்கு அவரின் நடனம் முகநூலில் 50,000 ஃபாலோவர்களைப் பெற்றுத் தந்திருந்தது. அதே சமூகவலைதளம் அவரின் ஆத்திரத்தையும் கண்டிக்கத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x