

இந்திய அணியின் கேப்டன் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த படம் ஒன்று இன்று இணையவாசிகளால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், மழையில் இந்திய வீரர்களுடன் நனைந்தபடி இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். அதில் கோலி முன்பாக, தோனி பின்னால் திரும்பி நின்றிருக்கிறார். இப்படத்தைப் பதிவிட்ட கோலி, ''குற்றத்தின் பங்குதாரர். எல்லைக்கோட்டில் ஃபீல்டிங்கில் நிற்கும் வீரர்களிடமிருந்து இரண்டு ரன்களைத் திருடுபவர். யார் இவர்?” என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் அனைவரும் கோலியின் பதிவுக்குக் கீழே தோனி என உற்சாகமாகப் பதிவிட்டனர்.
உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய வீரர் தோனி போட்டிகளில் பங்கேற்காமல் ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின் தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் தோனி தேர்வு செய்யப்படவில்லை. சமீபத்தில் முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரிலும் தோனியை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்யவில்லை.
Partners in crime