

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவண், ரோஹித் சர்மா மகளுடன் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களாக உள்ள ஷிகர் தவணும், ரோஹித் சர்மாவும் ஆடுகளத்தில் மட்டுமல்லாது, பொது வாழ்க்கையிலும் ஆரோக்கியமான நட்பைப் பகிர்ந்து வருகின்றனர். இதனை அவ்வப்போது தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இருவரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தவண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹித் சர்மாவின் மகளான சமைராவுடன் விளையாடும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் சமைரா, தவணின் தலையில் லேசாக அடித்தவுடன் அவர் மெத்தையின் மீது விழுகிறார். சமைராவை சிரிக்க வைக்க, இதனைத் தொடர்ந்து செய்கிறார் தவண்.
இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பகிர்ந்துள்ளனர். இதுவரை இந்த வீடியோ 7 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.