மேடையிலிருந்து தவறி விழுந்த லேடி காகா
பிரபல அமெரிக்கப் பாடகியான லேடி காகா இசை நிகழ்ச்சியின்போது தவறி விழுந்தார்.
பாப் பாடல்களில் புகழ்பெற்ற பெண் பாடகராக இருப்பவர் அமெரிக்கப் பாடகி லேடி காகா. பாடல்களுக்கு மட்டுமல்லாது வித்தியாசமான சிகை அலங்காரம், ஒப்பனை, ஆடை இவற்றாலும் கவரப்பட்டு ரசிகர்களைப் பெற்றவர் லேடி காகா.
இந்நிலையில் லாஸ் வேகாஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் மேடையில் லேடி காகா பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென தவறி ரசிகர்கள் கூடியிருந்த பக்கத்தில் விழுந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் விரைந்து வந்து லேடி காகாவை பத்திரமாக மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த லேடி காகா, ''பிரச்சனை ஒன்றும் இல்லை. எல்லாம் சரியாக உள்ளது'' என்று நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். இதனை ரசிகர்கள் பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
2013 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சியில் லேடி காகா மேடையில் தவறி விழுந்ததில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது
