Published : 15 Oct 2019 15:44 pm

Updated : 15 Oct 2019 15:44 pm

 

Published : 15 Oct 2019 03:44 PM
Last Updated : 15 Oct 2019 03:44 PM

நெட்டிசன் நோட்ஸ்: அப்துல் கலாம் பிறந்த நாள் - ஏவுகணை நாயகன்

apj-abdul-kalam-s-birth-anniversary

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏவுகணை நாயகன் ஏபிஜே அப்துல் கலாமின் 88- வது பிறந்த நாள் இன்று. இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

தீந்தமிழன்

"உறக்கத்தில் வருவதல்ல
கனவு
உறங்காவிடாமல் உன்னை உயர்த்தத் துடிப்பதே கனவு"

- மேதகு. அப்துல்கலாம் அய்யா

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Sundar Devendran

உலக அரங்கில்
இந்தியா நாட்டிற்கு
பெருமை அடையச் செய்தவர்
ஐயா APJ அப்துல் கலாம்
பிறந்த நாள்.


guna reddy

தென்கோடியில் பிறந்த தமிழன்... என்றென்றும் ஜனாதிபதியாய்... நம் மனதில்...

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட, நேசிக்கப்பட்ட
இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்


ரகோத்தமன் நடராஜன்

தெரியாது என்பதை
தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள்...

அதே நேரம் தெரியாததைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்...

அப்துல் கலாம்...

Sahaya Vivek

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் அவர்கள் காண நினைத்த கனவுதேசத்தை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதி ஏற்போம்!

குஸ்தி வாத்தியார்

ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட விருப்பமுள்ள அரசியல்வாதிகள், நடிகர்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த மக்களுக்கும் பிடித்தவராக இருந்தார் என்றால் அது ஐயா அப்துல் கலாம்தான்.

பிடித்தவர்களின் பிறந்த நாளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தால் பசுமைப் புரட்சி உண்டாகும்.

Sarath Acharya

இளைஞர்களின் முன்னோடி... குடியரசு முன்னாள் தலைவர், ஐயா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரைப் போற்றி வணங்குவோம்.

பொதக்குடியாா்

மாணவர்களுக்கு ஊக்கம் தந்து
குழந்தைகளுக்கு அன்பைத் தந்து
இளைஞர்களுக்கு எழுச்சி தந்து
மதம் மொழி இனம் கடந்து
தலைமுறை தாண்டி
மனிதம் வாழ கற்றுத் தந்த
அப்துல் கலாம் பெயரல்ல..
அக்னி சிறகின்
ஏவுகணை..!!

solai parkkavan

தமிழ் படித்து
தமிழில் படித்து
இந்தியாவை உலகுக்கு அறிமுகம் செய்த
உண்மையானவர் உதித்த தினம் இன்று
இந்திய குடியரசுத் தலைவர்
ஆ. ப. ஜெ. அப்துல்கலாம் அவர்கள்

Raghuvicky

தமிழரை தலை நிமிர வைத்த அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் .

NiranVas

மரமும் அறமும் வளர்ப்போம்.
ஏவுகணை நாயகன், இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம், தன்னம்பிக்கை நாயகன்
பிறந்த நாளில் அவரை இதயத்தில் வணங்குகிறோம்.

சந்துரு:)

விஞ்ஞானம் என்றால் என்ன எனக்கு அறிமுகம் செய்து என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு விஞ்ஞானத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அத்துறையில் செல்வதற்கு வழிவகுத்த விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..:))

நான் கெட்டவன் இல்ல

இந்தியாவின் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் ஐயா பிறந்த நாள்....
நீங்கள் இல்லாமல் நவீன இந்தியா இல்லை..
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா..

Lajapathi Rai

பாரத் ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று. கனவுகளை நினைவுபடுத்தும் தருணம் இது..

சக மனிதன்

அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாள் இன்று!!

இந்த தேசத்தை சிறந்த நாடாக மாற்றுவதற்கு தொடர்ந்து கனவு காண்போம். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

நெட்டிசன் நோட்ஸ்அப்துல்கலாம்இந்தியாஏவுகணை நாயகன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author