ஆபத்தில் இந்தி பிக்பாஸ்: டிரெண்டாகும் #BanBiggBoss

ஆபத்தில் இந்தி பிக்பாஸ்: டிரெண்டாகும் #BanBiggBoss
Updated on
1 min read

இந்தியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யுமாறு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்தனர்.

இந்தியில் பிக்பாஸ் ரியாலிடி ஷோவின் 13 வது சீசன் நிகழ்ச்சிகளை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் பிக்பாஸ்ஸுக்கு முன்னரே இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகளை கடந்து ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருவதால் பார்வையாளர்களிடம் பெரும் வரவேறை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சி குழந்தைகள் பார்க்க முடியாத நிகழ்ச்சியாக இருக்கிறது என்றும் இளைஞர்களையும், இந்திய கலாச்சாரத்தையும் சிர்கெடுக்கிறது என்று இதற்கு தடை விதிக்க வேண்டுமென பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார் இவர் சல்மான் கான் நடத்திவரும் பிக்பாஸ் ரியாலிடி ஷோ மிகப்பெரிய கலாச்சார கேடு விளைவிப்பதாக கூறி இதற்கு தடை கோரி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில தினங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பலரும் ட்விட்டரில் #BanBiggBoss என்று இந்திய அளவில் அந்நிகழ்ச்சியை விமர்சித்து பதிவிட்டனர்.

மேலும் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கானையும் விமர்சித்து பதிவுகளை பதிவிட்டனர்.

இந்த நிலையில் இதற்கு எதிராக பிக்பாஸை விரும்பி பார்க்கும் பார்வையாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் நோக்கில் இல்லை என்று #WeLoveBiggBoss என்று டிரெண்ட் செய்து நிகழ்ச்சிக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in