என் கண்ணாடியை எதற்கு ரன்வீர் போட்டிருக்கிறார்? மகள் ஸிவா குறித்து தோனியின் வைரல் பதிவு

என் கண்ணாடியை எதற்கு ரன்வீர் போட்டிருக்கிறார்? மகள் ஸிவா குறித்து தோனியின் வைரல் பதிவு
Updated on
1 min read

என் கண்ணாடியை எதற்கு ரன்வீர் போட்டிருக்கிறார் என்று தனது மகளான ஸிவா நினைத்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் தோனி நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், மிஸ்டர் கூல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

மேலும் தோனி விரைவில் தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வரும் நிலையில் யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் ஓய்வை அறிவிப்பது தோனியின் விருப்பம் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தோனி தனது குடும்பத்தினருடன் ஓய்வு நேரத்தைச் செலவிட்டு வருகிறார். இதில் திங்கட்கிழமை தனது மகள் ஸிவா பாலிவுட் நடிகர் ரன்வீர் குறித்து கூறிய பதிவு ஒன்று வைரலானது.

தோனி பதிவிட்ட படத்தில் அவரது மகள் ஸிவாவும் ரன்வீர் சிங்கும் ஒரே மாதிரியான கண்ணாடியை அணிந்திருந்தனர்.

இதுகுறித்து தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது கண்ணாடியை ஏன் இவர் அணிந்திருக்கிறார் என்று பார்த்த ஸிவா, மாடிக்குச் சென்று தனது கண்ணாடியைத் தேடினாள். இறுதியில் கண்டுபிடித்து என் கண்ணாடி என்னிடம்தான் உள்ளது என்று கூறினாள். குழந்தைகள் இந்த நாட்களில் வித்தியாசமாக இருக்கிறார்கள். நான்கரை வயதான குழந்தை கூட கண்ணாடிகள் ஒரே மாதிரியாக உள்ளதை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். அடுத்த முறை ரன்வீர் சிங்கை ஸிவா பார்க்கும்போது உங்களிடம் உள்ள கண்ணாடி போன்று என்னிடமும் ஒரு கண்ணாடி உள்ளது என்று கூறுவாள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஸிவா பற்றிய தோனியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in