மலர்ந்தும் மலராத பாடலைப் பாடும் வெளிநாட்டுப் பெண்: இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் வீடியோ 

மலர்ந்தும் மலராத பாடலைப் பாடும் வெளிநாட்டுப் பெண்: இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் வீடியோ 
Updated on
1 min read

இங்கிலாந்து இளம் பெண் ஒருவர் சிவாஜி கணேசன் சாவித்திரி நடிப்பில் வெளியான பாசமலர் படத்தில் இடம்பெற்ற மலர்ந்தும் மலராத பாதி மலர்போல பாடலைப் பாடி வெளியிட்டுள்ள வீடியோ ட்விட்டரில் வைரலாகிவருகிரது.

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் சமந்தா. இவர் அண்மையில் தமிழர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ் மீதும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது அதீத பற்று உண்டு. இதை அவரே ட்விட்டர் வீடியோக்களில் தெரிவித்திருக்கிறார். சமந்தாவின் ட்விட்டர் பக்கத்துக்கான லின்க்: https://twitter.com/NaanSamantha

இவருடைய தமிழ்ப் பாடல்களுக்கு ட்விட்டரில் ஏராளமான ஃபாலோயர்ஸும் உண்டு. இவர் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிகூட தமிழகத்தின் நாட்டு இனத்தைச் சேர்ந்ததே. அந்த அளவுக்கு இவருக்கு தமிழகம் சார்த்த பற்று அதிகம். அண்மையில் பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ட்விட்டரில் பாடி வெளியிட்டுள்ள 'மலர்ந்தும் மலராத..' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொஞ்சும் தமிழில் அவர் பாடும் பாடலை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். சமந்தாவின் ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற ஏராளமான தமிழ்ப் பாடல்கள் உள்ளன.

மலர்ந்தும் மலராத பாடலுக்கான லின்க்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in