ராஞ்சியில் தினமும் மின் தட்டுப்பாடு: சாக்‌ஷி தோனி ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் ஆதரவு

ராஞ்சியில் தினமும் மின் தட்டுப்பாடு: சாக்‌ஷி தோனி ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் ஆதரவு
Updated on
1 min read

ராஞ்சி மக்கள் தினமும் மின்வெட்டைச் சந்திக்கிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து சாக்‌ஷி தோனி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் கடந்த ஐந்து மணி நேரமாக மின்வெட்டு நீடிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இங்கு தினமும் மின்வெட்டு ஏற்படுகிறது. ராஞ்சி மக்கள் தினமும் மின்வெட்டைச் சந்திக்கின்றனர். தினமும் 4 முதல் 7 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருப்பது கடினமானது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவைத் தொடர்ந்து ராஞ்சி மக்களும் நகரில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாடு குறித்து சாக்‌ஷி தோனி பதிவில் பதிவிட்டனர். ராஞ்சி மட்டுமல்ல ஜார்க்கண்ட் முழுவதும் இந்த நிலைதான் நீடிக்கிறது என்றும் தெரிவித்தனர்.

விரைவில் மின்தடையை நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், ஜார்க்கண்ட் முதல்வருக்கும் நெட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in