

பிரதமர் மோடி பிறந்த நாளை தொடர்ந்து இந்திய அளவில் சமூகவலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு ஹாஷ்டேக்குகள் டிரெண்ட்ராகி வருகின்றன.
பிரதமர் மோடிக்கு இன்று 69-வது பிறந்தநாள். தனது பிறந்தநாளான இன்று குஜராத்தில்தான் இன்றுமுழுமையாக பிரதமர் மோடி செலவிடுகிறார். பிரதமர் மோடிக்கு அமித் ஷா, மம்தா, ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் ‘‘பிரதமர் மோடியின் தலைமையில் நாடு நிலையான வளர்ச்சி அடைந்து வருகிறது. மோடிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ட்விட்டர் உட்பட சமூகவலைதளங்களில் பலரும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்காக #HappyBdayPMModi, #happybirthdaynarendramodi, #HappyBirthdayPM, #NarendraModiBirthday போன்று பத்துக்கும் மேற்பட்ட ஹாஷ்டேக்குகள் ட்விட்டரில் இந்திய அள்வில் ட்ரெண்டாகி வருகின்றனது.
இந்தியா முழுவதும் உள்ள நெட்டிசன்கள் பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்தை பிரதமர் மோடிக்கு தெரிவித்து வருகின்றனர்.