

அமெரிக்காவின் பிரபல பாடகரும், பாடலாசிரியரும், கிட்டாரிஸ்ட் கலைஞர்களுக்கு இந்த நூற்றாண்டின் தனித்துவமான அடையாளம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த இசைக் கலைஞருமான பி.பி. கிங்கின் 94- வது பிறந்த நாள் இன்று.
இதனைத் தொடர்ந்து பி.பி.கிங்குக்கு கூகுள் டூடுலை வெளியிட்டு கவுரவித்துள்ளது.
கூகுளின் முகப்பு பக்கத்தில் கையில் கிட்டாருடன் வரையபட்டிருக்கும் கிங்கின் பிம்பத்தை கிளிக் செய்தால் கிங்கின் பிரபல பாடலான ’The thrill is gone away baby’ என்ற பாடல் பின்னணியில் ஓட கிங்கின் இளமை காலம் முதல் அவரது இசை வாழ்க்கை எவ்வாறு பயணித்துள்ளது என்றும் கிட்டாருடன் அவர் கொண்டிருந்த காதலை இந்த உலகிற்கு எவ்வாறு தனது இசையின் மூலம் உணர்ந்தினார் என்று அனிமேஷன் வடிவிலான வீடியோ ஒன்றையையும் கூகுள் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, பிறந்த கிங் தேவாலயங்களிலும், தெரு முனை நிகழ்ச்சிகளிலும் கிட்டார் வாசித்து தனது இசை வளர்த்துக் கொண்டவர்.
இசை துறை வழங்கப்படும் மிகப் பெரிய விருதான கிராமி விருதை 15 முறையும்,கிராமியின் வாழ் நாள் சாதனையாளர் விருதையும் கிங் பெற்றிருக்கிறார்.
80 வயதை கடந்தும் மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன் எந்தவித தொய்வு இல்லாமல் வியர்வையுடன் தான் நேசித்த இசைக்காக முழு அர்பணிப்பை புரிந்த கிங்கின் ஒவ்வொரு இசை நிகழ்ச்சிகளும் அவரது ரசிகர்களாலும் தொடர்ந்து நினைவு கூறப்பட்டு வருகின்றன.
இவ்வாறு இசை துறையிலும், கிட்டர் இசையிலும் புது புது நுணுக்கங்களை அறிமுகப்படுத்திய இசை மாயஜாலன் கிங் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 தேதி மரணமடைந்தார்.