

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11-ஐ வெளியிட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐபோன் நிறுவனம் தனது புதிய படைப்புகளை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் நேற்று (செப்.10) ஐஃபோன் 11-ஐ வெளியிட்டது.
அதிக கேமராக்களை கொண்ட ஐபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசியை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ,65,000 என்று நிர்ணயிக்கப்பட்டுளது.
இத்துடன் ஐபோன் புரோ, ஐபோன் புரோ மேக்ஸ் என்ற இரண்டு மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஐபோன் புரோ ரூ.72,000 என்றும் ஐபோன் புரோ மேக்ஸ் ரூ.80,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஐபோன் 11-ன் சிறப்பம்சங்கள்:
* 6.1 இன்ச் திரை எல்ஆர்டி (Liquid Retina display) டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
* ஏ-13 பயோனிக் சிப் உள்ளது.
* டால்பி விஷன் மற்றும் டால்பி ஒலி வடிவமைப்பு கொண்டது.
* பின்பக்க கேமரா 12 எம்.பி. திறன் கொண்டது.
* பிரைமரி கேமரா அல்ட்ராவைலட் கதிர் வசதி கொண்டது.
* இரவு நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களைத் துல்லியமாக எடுக்க உதவும் ஸ்மார்ட் எச்டிஆர் தொழில்நுட்பம் உள்ளது.
* முன்பக்க செல்ஃபி கேமரா 12 எம்.பி. கொண்டது.
இந்த ரக ஐபோன்கள் கருப்பு, வெள்ளை, சிவப்பு, நீலம், பர்ப்பிள், மஞ்சள் ஆகிய 6 நிறங்களில் கிடைக்கும்.
ஸ்லோஃபி எடுக்கலாம்..
இதில் ஸ்லோஃபி என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஸ்லோமோஷனின் செல்ஃபி எடுக்க இயலும்.
தற்போது, ஸ்மார்ட்போன் சந்தையில் விற்கப்படும் போன்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேக மைய செயலகமும் (CPU), அதிவேக கிராபிக்ஸ் செயலகமும் (GPU) கொண்டது ஐபோன் 11 என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.