Published : 09 Sep 2019 11:30 AM
Last Updated : 09 Sep 2019 11:30 AM

ட்விட்டரில் பிரதமர் மோடியைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரிப்பு

ட்விட்டர் சமூகவலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் ட்விட்டரில் அதிகம் பின்தொடரப்படும் இந்தியர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றிருக்கிறார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவே ட்விட்டர் தளத்தில் உலகளவில் அதிகம் பின் தொடரப்படும் அரசியல் தலைவராக இருக்கிறார்.

ஒபாமாவை 10.8 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் தற்போதைய அதிபர் டொனாலாட் ட்ரம்ப் இருக்கிறார். ட்ரம்பை 6.4 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

இந்தியளவில் மோடிக்கு நிகராக எந்த அரசியல் தலைவருக்கும் ட்விட்டரில் ஃபாலோயர்ஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2009-ல் குஜராத் முதல்வராக இருந்தபோது தொடங்கி பிரதமர் மோடி ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்திவருகிறார்.

@PMOIndia, @narendramodi என இரண்டு கணக்குள் மோடிக்கு உள்ளன. இவற்றில் @narendramodi என்ற ட்விட்டர் கணக்கை 5 கோடி பேரும், @PMOIndia என்ற் ட்விட்டர் கணக்கை 3.5 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x