Published : 02 Sep 2019 11:53 AM
Last Updated : 02 Sep 2019 11:53 AM

ட்விட்டரில் சர்ச்சையை ஏற்படுத்திய விநாயகர் சதுர்த்தி விளம்பரம்; நெட்டிசன்கள் காட்டம்

ரெட்லேபல் என்னும் தேநீர் நிறுவனம் விநாயகர் சதுர்த்திக்காக கடந்த ஆண்டு வெளியிட்ட விளம்பரம் தற்போது ட்விட்டரில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்டம்பர் 11, 2018-ல் ரெட்லேபல் நிறுவனம், ஒரு விளம்பரத்தை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது. அதில், இந்து இளைஞர் ஒருவர் விநாயகர் சிலையை வாங்க வருவார். சிலையைத் தேர்வு செய்து முடிக்கும் தறுவாயில், விற்பனை செய்யும் முதியவர் தனது குல்லாவை எடுத்து மாட்டுவார்.

அதைப் பார்த்த இளைஞர், சிலை வேண்டாம் என்று திரும்பிச் செல்ல எத்தனிப்பார். சில, பல உரையாடல்களுக்குப் பிறகு மனம் மாறுவார் இளைஞர்.

தற்போது இந்த விளம்பரத்துக்கு நெட்டிசன்கள் பலர், தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். #BoycottRedLabel #BoycottUnilever என்ற ஹேஷ்டேக்குகளுடன் அவர்கள், தங்களின் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதில், 'இந்துக்களுக்கு சகிப்புத்தன்மை கிடையாதா?', 'வேறு மதத்தைச் சேர்ந்தவர்களை உங்களால் இவ்வாறு தைரியமாக விமர்சிக்க முடியுமா?' என்பது உள்ளிட்ட பதிவுகள் வெளியாகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x