Published : 24 Aug 2019 03:33 PM
Last Updated : 24 Aug 2019 03:33 PM

ரயில் நிலைத்தில் பாடிக் கொண்டிருந்த ஆதரவற்ற பெண்ணுக்கு பாலிவுட்டில் பாடும் வாய்ப்பு

சிலரது ரயில் பயணங்கள் அவர்களது வாழ்கையில் எதிர்பாராத பயணத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். அம்மாதிரியான அற்புதமான நிகழ்வுதான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரானு மொண்டாலுக்கு நடந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் கொல்கத்தா ரனகாட் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் ரனா மொண்டால் என்ற ஆதரவற்ற பெண் பிரபல ஹிந்தி பாடகியான லதா மங்கேஷ்கரின் ’ ஏக் பயார் கா நக்மா ஹா ’ என்ற பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதன் மூலம் ரானு சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்தார். ரானு பாலிவுட்டில் பாட வேண்டும் என்று பலரும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ரானு பாலிவுட்டில் பாட்டு போட்டி நிகழ்ச்சியில் விருந்தினராகவும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் ரானுவுக்கு ஹிந்தி படம் ஒன்றில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பிரபல இசை அமைப்பாளர் ஹிமாஷ் ரேஷாமியா வழங்கி இருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ பதிவையையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரானுக்கும் சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரயிலில் பயணத்தில் பாடியதை ஒருவர் காணொலியாக பதிவு செய்து வலைதளத்தில் பதிவிட அது ரானுவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு புதிய பாதையை வழங்கியுள்ளது.

A post shared by Himesh Reshammiya (@realhimesh) on

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x