Published : 22 Aug 2019 05:46 PM
Last Updated : 22 Aug 2019 05:46 PM

சென்னை என்பது பேரு; மெட்ராஸ் என்பது உணர்ச்சி: ட்விட்டரில் ஹர்பஜன் சிங் மெட்ராஸ் டே வாழ்த்து

சென்னை என்பது பேரு; மெட்ராஸ் என்பது உணர்ச்சி என ட்விட்டரில் மெட்ராஸ் டே-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

தமிழகம் சார்ந்த விஷயங்களுக்கு தமிழில் ட்வீட் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஹர்பஜன் சிங்.

அண்மையில் கொள்ளையர்களை விரட்டிய நெல்லை தம்பதியரை பாராட்டி "திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம். பாசத்துக்கு முன்னாடி நான் பனி பகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் #நேர்கொண்டபார்வை. Hats-off to the elderly couples of Thirunelveli who fought with Robbers என்று விஜய், அஜித் படங்களின் தலைப்புகளை வைத்து ட்வீட் செய்து கலவையான விமர்சனங்களைப் பெற்றார் ஹர்பஜன் சிங்.

இந்நிலையில் இன்று, " சென்னையின் 380 பிறந்ததினத்தை ஒட்டி,"கலீஜ்,டௌலட்,பிசுக்கோத்,நைனா, ஓசி,பிஸ்து,அட்டு,பேஜார், அள்ளு,தல,மாமி,மாமே,இப்பிடி எத்தனை வார்த்தைங்க நம்ம சென்னையை அலங்கரிக்க.ஆதார் கார்டு இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் தாங்க.சென்னை என்பது "ஊர் பெயர்" மெட்ராஸ் என்பது "உணர்ச்சி" Happy #chennaiday #MadrasDay #Madras380" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x