Published : 16 Aug 2019 03:14 PM
Last Updated : 16 Aug 2019 03:14 PM

ஹெல்மெட்டில் சிக்கிய பந்து: டிரெண்ட் போல்ட்டை அவுட்டாக்க சுற்றி வந்த இலங்கை வீரர்கள்

நியூஸிலாந்து - இலங்கை இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வீரர் போல்டின் ஹெல்மெட்டுக்குள் பந்து சென்றதால் சுவாரஸ்யமான சம்பவம் மைதானத்தில் நடந்தது.

இலங்கை - நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 249 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

அதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 267 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடி வருகிறது நியூஸிலாந்து.

நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டிரெண்ட் போல்ட், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் லசிந்தின் சுழற்பந்து வீச்சை சுழற்றி அடித்தார். அப்போது பந்து அவரது ஹெல்மெட்டுக்குள் சென்று சிக்கிக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து இலங்கை வீர்ரகள் அவரது ஹெல்மெட்டிலிருந்து கீழே விழும் பந்தை பிடித்தால் போல்ட், அவுட் என்பதற்காக விளையாட்டாக அவரைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து போல்ட் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சிரித்துக்கொண்டே நகர்ந்து சென்று போக்குக் காட்டினார். இலங்கை வீரர்கள் அவரை சுற்றிச்சுற்றி வந்து கேட்ச் பிடிப்பதுபோல் பாவ்லா காட்டினர். இந்த நிகழ்வு மைதானத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x