இந்திய கிரிக்கெட் அணியினர் கூறிய சுதந்திர தின வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியினர் கூறிய சுதந்திர தின வாழ்த்து
Updated on
1 min read

சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர் .

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள் கூறும் வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் இந்திய அணி கேப்டன் கோலி , துணை கேப்டன் ரோஹித் சர்மா, சாகல், ஜடேஜா, ஜாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், குல்திப் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in