

மெக்சிகோ - அமெரிக்க எல்லைக்கிடையே 2000 மைல் நீளத்தில் பிரம்மாண்ட சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார்.இந்த சுவருக்கு பேராசிரியர்கள் இருவர் இணைந்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவரது இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொனால்ட் ரஃபேல், சான் ஜோஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஃப்ராடெல்லோ ஆகியோர் இணைந்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
நியூ மெக்சிகோவின் சன்லேண்ட் பார்க், மெக்சிகோவின் சியுடாட் ஜூவாரேஸ் பகுதிகளுக்கு இடையே எல்லைச் சுவரில் 3 இடங்களில் பிங்க் நிற சீ-சாக்கள் பொருத்தப்பட்டிருந்தனர்.
எல்லையின் இருபுறமும் குழந்தைகளும், பெரியவர்களும் அந்த சீசாவில் அமர்ந்து விளையாடி குதூகலிக்கின்றனர்.
இது குறித்து பேராசிரியர் ஃபராடெல்லோ நம்பமுடியாத பேரணுபவத்தை இது வழங்குகிறது. மக்கள் மகிழ்ச்சியாக இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த சுவர் இப்போது அமெரிக்ககா - மெக்சிகோ இடையேயான நட்புறவை நிர்ணயிக்கும் மையப் புள்ளி போல் ஆகிவிட்டது. ஒருமுனையில் நிகழும் செயலின் தாக்கம் மறுமுனையில் தெரியும் என்பதே சீசா விளையாட்டின் எளிய தத்துவம். அந்த தத்துவம் அமெரிக்கா - மெக்சிகோ நாடுகளுக்கான உறவுக்கும் பொருந்தும்.
இந்த சீசா படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மெக்சிகோ நாட்டில் பிரபல நடிகர் மவுரிகோ மார்டினேஸ் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில். "நாங்கள் இணைந்திருக்கிறோம் என்பதற்கான அழகான நினைவூட்டல் இது. ஒரு புறம் நடக்கும் நிகழ்வு மறுபுறமும் தாக்கத்தை ஏற்படுத்தும்" எனப் பதிவிட்டுள்ளார்.