

மும்பை ஐஐடி வகுப்பறைக்குள் பசு ஒன்று உலா வருவது போன்றும் அதனை மாணவர்கள் விரட்டுவது போன்றும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகப் பரவி வருகிறது.
இச்சம்பவம் சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது. வீடியோவை மாணவர் ஒருவரே பகிர்ந்துள்ளார். மழை பெய்ததால் பசு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
இதனால், இது குறித்து ஐஐடி மையத்திடம் ஐஏஎன்எஸ் செய்தி கேள்வி எழுப்ப, அதிகாரிகளோ சம்பவம் மும்பை ஐஐடி வகுப்பறையில்தான் நடந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறிவிட்டனர். மேலும் இது குறித்து விசாரணை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரத்துக்கு முன்னதாகத் தான் மும்பை ஐஐடி வளாகத்தில் சுற்றித்திரிந்த காளை மாடு ஒன்று மாணவர் ஒருவரை முட்டியது. அதற்குள் தற்போது பசு ஒன்று வகுப்பறைக்குள் நுழைந்த சம்பவம் நடந்திருக்கிறது.
அதேபோல், மும்பையில் சில தினங்களுக்கு முன்னதாக கனமழை பெய்தபோது சிறுத்தை ஒன்று ஐஐடி வளாகத்துக்குள் தஞ்சம் புகுந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ ட்விட்டரில் வைரலான நிலையில் ஐஐடியில் சேர ஜெஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தொனியில் ட்விட்டரில் பலரும் மீம்ஸ் பதிவேற்றி வருகின்றனர்.
வகுப்பறைக்குள் மாடு உலா வரும் வீடியோவுக்கான இனைப்பு: