விஜய் குறித்து அஜித் ரசிகர்களின் அபத்தமான ட்ரெண்டிங்: ட்விட்டரில் விமர்சித்த அஸ்வின்

விஜய் குறித்து அஜித் ரசிகர்களின் அபத்தமான ட்ரெண்டிங்: ட்விட்டரில் விமர்சித்த அஸ்வின்
Updated on
1 min read

சமூக வலைதளங்களில் ரசிகர்களின் சண்டை நாளுக்கு நாள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது.

தங்களுக்குப் பிடித்தமான நடிகர்களுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தருவதைத் தாண்டி பிற நடிகர்களை இழிவாக விமர்சித்து ட்ரெண்ட்  செய்யும் மனநிலை தமிழக இளைய தலைமுறையினரிடம் சமீப நாட்களாக அதிகமாகப் பரவி வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் நடிகர் விஜய்யின் பிறந்த நாளுக்கு முன்னர் நடிகர் அஜித்தின் ரசிகர்கள்,  விஜய் இறந்ததாக வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர். இந்த ட்ரெண்ட் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளான  நிலையில் இதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் #LongLiveAjithkumar என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து அனைவரது பாராட்டையும் பெற்றனர். 

இந்நிலையில், அஜித்தின் திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை' அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தை விமர்சித்து இழிவுபடுத்தும் வகையில் #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்று விஜய் ரசிகர்கள் நேற்று ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் மீண்டும் #RIPactorVIJAYஎன்ற ஹேஷ்டேக்கை இந்திய அள்வில் ட்ரெண்ட் செய்தனர். 

இந்நிலையில் தமிழக இளைஞர்களின் இந்த மனநிலையை கிரிக்கெட் வீரர் அஸ்வின் விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கதில் ,” சில நாட்களுக்கும் முன்னர் சிறிய கல் ஒன்று நமது கிரகத்தை தாக்கியது. வழக்கத்துக்கு மாறான பருவ நிலைகாலங்களால் பல்வேறு நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  நமது நாட்டில் பல்வேறு இடங்களில் வறட்சி நிலவுகிறது. ஆனால் நமது அழகான மாநிலத்தின் இளம் தலைமுறையினர்... #RIPactorVIJAY என்பதை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in