தொடர் ஆட்டநாயகன் விருது  எனக்கா? - வைரலாகும் வில்லியம்ஸன்  வீடியோ 

தொடர் ஆட்டநாயகன் விருது  எனக்கா? - வைரலாகும் வில்லியம்ஸன்  வீடியோ 
Updated on
1 min read

நியூஸிலாந்து இங்கிலாந்து இடையே நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 
முதல் முறையாக வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

முதலில் நடைபெற்ற பிரதான போட்டியில்  நியூஸிலாந்து அடித்த 241 ரன்னை இங்கிலாந்து எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது . இதனைத் தொடர்ந்து  நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. இதனால், ஒரு இன்னிங்ஸில் அதிகமான பவுண்டரி எந்த அணி அடித்தது என்ற அடிப்படையில் கணக்கிடும்போது இங்கிலாந்து அணி அதிகமாக அடித்திருந்ததால், அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.  இங்கிலாந்து 26 பவுண்டரிகளும், நியூஸிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன.

ஆட்டநாயகன் விருது பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டது, இதில் உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  நியூஸிலாந்துக்காக இந்தக் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்ஸனுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் உலகப்கோப்பை போட்டியின் தொடர்  நாயகன் விருது தனக்கு வழங்கப்படுவதை ஐசிசி அதிகாரி ஒருவர் கேன் வில்லியம்ஸனிடம் கூறினார். இதனைத் கேட்டதும் கேன் வில்லியம்ஸன் ’எனக்கா? எனக்கா?’ என்று குழப்பத்துடன் கேட்டார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.

நெட்டிசன்கள் பலரும் , கேன் வில்லியம்ஸனின் கேப்டன்ஷிப்பையும், அவரது ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப்பையும் பாராட்டி வருகின்றனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in